சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2025-ம் ஆண்டு 7-வது மாநில நிதிக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் நியமிக்கப்பட்டார்.
இந்த குழு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, மாநில அரசிடம் பரிந்துரை அறிக்கையை ஆக.31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதற்கான காலக்கெடு டிச.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசிதழிலும் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை ஆய்வு செய்து, விரிவான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்க நிதிக் குழுவுக்கு 4 மாதம் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.