தமிழகம்

சின்னசேலம் அருகே பெருமாள் கோயிலுக்குள் முதல்முறையாக அனுமதி - பட்டியல் சமூக மக்கள் மகிழ்ச்சி

என்.முருகவேல்

மாகள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே குரால் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் பிரகாரத்துக்குள் சென்று வழிபட மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முதல்முறையாக அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று வழிபாடு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குரால் கிராமத்தில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள் கோயில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இந்து சமய அறநிலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டியலின மக்கள் கோயிலின் வாசலில் மட்டும் வந்து சாமி கும்பிட்டு வந்த நிலையில், கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார், பட்டியல் சமூக மக்கள் கோயில் பிரகாரத்துக்குள் சென்று வழிபடும் வகையில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் வழிபாடு மேற்கொண்டனர்.

இதையறிந்த மாற்று சமுதாயத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT