டி.ராஜா | கோப்புப் படம் 
தமிழகம்

அதிமுகவை தங்கள் அணியில் பாஜக சேர்த்திருப்பது ஏன்? - டி.ராஜா விளக்கம்

செய்திப்பிரிவு

தமிழக அரசி​யலில் தனக்​கென்று ஒரு இடத்தை பெற்​றுக் கொள்ள வேண்​டும் என்று பாஜக போராடு​கிறது. அதற்​காக அதி​முக உள்​ளிட்ட சில கட்​சிகளை தன் பக்​கம் அணி சேர்த்​திருக்​கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் நடை​பெற உள்ள சட்​டப்​பேரவை தேர்​தல் தமிழக வரலாற்​றில் மிக முக்​கிய​மான ஒன்​றாகும். தேர்​தலுக்​காக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமைக்​கப்​பட்​டிருக்​கும் மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி, வெறும் தேர்​தல் கூட்​டணி அல்ல. தமிழகத்​தின் நலன், வளர்ச்​சி, சமத்​து​வம் மற்​றும் சமூக நீதி​யைக் காக்​கும் கொள்​கைக் கூட்​ட​ணி​யாகும். இந்த அணி​யின் வெற்​றிக்​காக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி முழு​மை​யாகப் பணி​யாற்றி வரு​கிறது.

          

அதே​நேரம் தமிழகத்​தில் எப்​படி​யா​வது காலூன்றி விட வேண்​டும், தமிழக அரசி​யலில்தனக்​கென்று ஒரு இடத்தை பெற்​றுக் கொள்ள வேண்​டும் என்று பாஜக போராடு​கிறது. அதற்​காக அதி​முக உள்​ளிட்ட சில கட்​சிகளை தன் பக்​கம் அணி சேர்த்​திருக்​கிறது. எந்த அணி தமிழகத்​தின் நலனுக்கு ஏற்​றது? என்​பதை மக்​கள் யோசிக்க வேண்​டும். பாஜக தமிழத்​தில் காலூன்ற கூடாது.

பாஜகவோடு அதி​முக அணி சேர்ந்​தா​லும் சரி, வேறு எந்த கட்சி அணி சேர்ந்​தா​லும் சரி அவர்​களும் இந்த தேர்​தலில் வீழ்த்​தப்பட வேண்​டும். தமிழக நலன் காக்​க​, தி​முக கூட்​ட​ணியை மக்​கள்​ ஆதரிக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறினார்.

SCROLL FOR NEXT