தமிழகம்

கள்ளச்சந்தையில் சிலிண்டர் விலை ரூ.6,500: தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு விலை உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ​காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால், கள்​ளச்​சந்​தை​யில் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர்​களை பல ஆயிரம் ரூபாய் கூடு​தலாகக் கொடுத்து வாங்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஓட்​டல்​களில் தேநீர், சிற்​றுண்​டி, சாப்​பாடு உள்​ளிட்​ட​வற்​றின் விலை கணிச​மாக அதி​கரித்​துள்​ளது.

மத்​தி​யக் கிழக்​கில் போர்ப் பதற்​றம் நீடிக்​கிறது. இதனால் ஈரானின் கடல்​வழி போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டு இந்​தி​யா​வில் எல்​பிஜி காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் விநி​யோகிக்​கப்​படும் நிலை​யில், வணி​கப் பயன்​பாட்டு சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மருத்​து​வ​மனை, கல்வி நிறு​வனங்​களுக்கு மட்​டும் முன்​னுரிமை அடிப்​படை​யில் காஸ் சிலிண்​டர் வழங்​கப்​படு​கிறது.

          

வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​ட​தால், பெரும்​பாலான இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. சிலர் விறகு அடுப்​பைப் பயன்​படுத்​துகின்​றனர். காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் உணவகங்​கள், தேநீர் கடைகள் பெரிதும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. பல இடங்​களில் தேநீர் மற்​றும் சிற்​றுண்டி விலை அதி​கரித்​துள்​ளது.

சில கடைகள் வணிக சிலிண்​டர்​கள் கிடைக்​காமல் வீட்டு உபயோக சிலிண்​டரை நம்பி இருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. நுங்​கம்​பாக்​கம், வடபழனி, அடை​யாறு, தி.நகர், வேளச்​சேரி உள்​ளிட்ட பகு​தி​களில் பல சாலை​யோர உணவகங்​கள் மற்​றும் தேநீர் கடைகளில் வணிக சிலிண்​டர்​கள் கிடைக்​க​வில்லை என்று அறி​விப்​புப் பலகைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன.

நுங்​கம்​பாக்​கம், சூளைமேட்​டில் ஒரு கப் தேநீரின் விலை ரூ.12-ல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்​துள்​ளது. தாம்​பரத்​தில் ரூ.20-க்கு விற்​பனை செய்​யப்​பட்ட தேநீர் தற்​போது ரூ.25 ஆக விலை உயர்ந்​துள்​ளது. அடை​யாறில் சமோ​சா, பஜ்ஜி, போண்டா போன்ற சிற்​றுண்​டிகள் விலை ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்​துள்​ளது. கலவை சாதம் விலை​யும் உயர்ந்​துள்​ளது. உணவகங்​களில் சாப்​பாட்​டுக் கட்​ட​ணத்​துடன் காஸ் சிலிண்​டர் கட்​ட​ணத்​தைச் சேர்த்து வாடிக்​கை​யாளர்​களிடம் வசூலிக்​கின்​றனர்.

தேநீர் கடை உரிமை​யாளர்​கள் மற்​றும் உணவக சங்​கங்​கள் ஒருங்​கிணைந்​து, உணவுப் பொருட்​கள் விலையை உயர்த்த எந்த கூட்​டுத் தீர்​மான​மும் எடுக்​க​வில்​லை. ஒவ்​வொரு கடை உரிமை​யாள​ரும் தனிப்​பட்ட முறை​யில் விலை​யேற்​றம் செய்​துள்​ளனர். இதற்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டரை கள்​ளச்​சந்​தை​யில் ரூ.3 ஆயிரத்​திலிருந்து ரூ.6,500 வரை கொடுத்​தும் வாங்​கும் நிலையே முக்​கியக் காரணம் ஆகும். இது சிறிய கடைகளின் உரிமை​யாளர்​களுக்கு பெரும் சுமை​யாக மாறி​யுள்​ளது.

இதுகுறித்​து, சிறிய உணவுக் கடை உரிமை​யாளர்​கள் கூறிய​தாவது: கள்​ளச்​சந்​தை​யில் ரூ.3,000-க்கு விற்​கப்​பட்ட வணி​கப் பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் விலை இப்​போது ரூ.6,500 வரை விற்​கப்​படு​கிறது. பல இடங்​களில் ரூ.6,500-க்​கும் காஸ் சிலிண்​டர் கிடைக்​காத நிலை இருக்​கிறது. நெருக்​கடியைச் சமாளிக்க முடி​யாத நிலை இருக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

வாடிக்கையாளர்கள் தவிப்பு: இதற்​கிடை​யில் வீட்டு உபயோக காஸ் சிலிண்​டர் முன்​ப​திவு செய்​தும், உரிய காலத்​தில் கிடைக்​காமல் வாடிக்​கை​யாளர்​கள் தவித்து வரு​கின்​றனர். சிலிண்​டர் முன்​ப​திவு கால இடைவெளி 21 நாட்​களி​லிருந்து நகர்ப்​புறங்​களுக்கு 25 நாட்​கள், கிராமப்​புறங்​களுக்கு 45 நாட்​கள் என நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி முன்​ப​திவு செய்​தா​லும் உரிய காலத்​தில் வீட்டு உபயோக சிலிண்​டர் கிடைக்​காத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பொது​மக்​கள் கூறுகை​யில், “முன்பு எல்​லாம், சிலிண்​டர் முன்​ப​திவு செய்​தால் அடுத்​தடுத்து செயல்​முறை முடிந்​து, ஓரிரு நாட்​களில் சிலிண்​டர் வீட்​டுக்கு வந்​து​விடும். இப்​போது ஒரு​வாரம் கடந்​தா​லும் காஸ் சிலிண்​டர் வரு​வ​தில்​லை. மிக​வும் கால​தாமதம் ஏற்​படு​கிறது. இதற்கு தீர்வு காண வேண்​டும்” என்​றனர்.

SCROLL FOR NEXT