தமிழகம்

‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படத்தை லீக் செய்​தது யார் என்​பது குறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வரும், தமிழ் திரை​யுல​கின் உச்ச நட்​சத்​திர​மு​மான விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்​கத்​தில், சுமார் ரூ.500 கோடி பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இப்​படம், விஜய்​யின் திரைப்​பயணத்​தில் கடைசிப் படம் என்​ப​தால் உலகள​வில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பெரிய நட்​சத்​திர பட்​டாளமே நடித்​துள்​ளனர்.

          

கடந்த ஜனவரி மாதம் பொங்​கலுக்கு வெளி​யாக வேண்​டிய ​படம், எதிர்​பா​ராத தணிக்கை சிக்​கல்​களால் முடங்​கியது. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு​தணிக்​கைக் குழு இப்​படத்​தைப் பார்​வை​யிட்​டது. விரை​வில் சான்​றிதழ் கிடைத்து படம் திரைக்கு வரும் என்று ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்​தனர். இந்​நிலை​யில், படக்​குழு​வினருக்​கும் ரசிகர்​களுக்​கும் பேரிடி​யாக ஒரு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

தணிக்​கைச் சான்​றிதழுக்​காகக் காத்​திருக்​கும் சூழலில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப் பதிப்​பும் நேற்று முன்​தினம் அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாகக் கசிந்​தது. திரையரங்​கு​களில் வெளி​யா​வதற்கு முன்பே படம் கசிந்​த​தால் ஒட்​டுமொத்​தப் படக்​குழு​வும் கடும் அதிர்ச்​சி​யில் உறைந்​துள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் முன்​னாள் தலை​வர் கேயார், தமிழக டிஜிபி​யிடம் புகார் அளித்​தார்.

திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்ட மர்ம நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவர் வலி​யுறுத்​தி​யிருந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்​துள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார், ஐபி முகவரி மற்​றும் டிஜிட்​டல் தடயங்​களை வைத்து பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்​தச் சட்​ட​விரோதச் செயலில் தனி​நபர்​கள் ஈடு​பட்டார்​களா, தொழில்​நுட்ப ரீதி​யாக படம் எங்கே இருந்து கசிந்​தது, தணிக்கை அலு​வல​கத்​துக்கு அனுப்​பப்​பட்ட நகலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்​பட்​டதா என்ற கோணத்​தில் விசா​ரணை நடக்​கிறது. விஜய் தற்​போது அரசி​யலில் கால்​ப​தித்​துள்ள நிலை​யில், இதற்​குப் பின்​னால் ஏதேனும் அரசி​யல் சதி இருக்​குமா என்​பது குறித்​தும் விசா​ரிக்​கப்​படு​வ​தாக போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. மேலும், படத்​தின் போஸ்ட் புரொடக்​சன் பணி​களில் ஈடு​பட்ட ஊழியர்​கள், தொழில்​நுட்​பக்​ கலைஞர்​கள்​ ஆகியோரிடம்​ வி​சா​ரணை நடத்த உள்​ளனர்​.

SCROLL FOR NEXT