மாணிக்கம் தாகூர் எம்.பி | கோப்புப்படம் 
தமிழகம்

சிறைகளில் கைதிகள் மரணம் தமிழகத்துக்கு மிகப்பெரிய களங்கம்: மாணிக்கம் தாகூர் விமர்சனம்

செய்திப்பிரிவு

விருதுநகர்: சிறை​களில் கைதி​கள் மரணம் என்​பது தமிழகத்​துக்கு மிகப்​பெரிய களங்​கத்தை ஏற்​படுத்​துகிறது. இச்​சம்​பவங்​கள் கண்​டிக்​கத்​தக்​கது. ஒரு சில காவலர்​களால் ஒட்​டுமொத்த காவலர்​களுக்​கும் களங்​கம் ஏற்​படு​கிறது. காவல்​துறை சீரமைக்​கப்பட வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் ​தாகூர் எம்​.பி. தெரி​வித்​தார்.

கடந்த கல்வி ஆண்​டில் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-1 தேர்​வு​களில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்​களைப் பிடித்த மாணவ, மாணவி​களுக்கு காம​ராஜர் விருது வழங்​கும் விழா காங்​கிரஸ் கட்சி சார்​பில் விருதுநகரில் நேற்று நடை​பெற்​றது. இதில் மாணிக்​கம் தாகூர் கலந்​து​கொண்டு 250 பள்​ளி​களை சேர்ந்த 1,200 பேருக்கு விருதுகளை வழங்​கி​னார்.

பின்னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழகம் ஒன்​றாக இருக்க வேண்​டும். இது நமது வாழ்​வா​தா​ரப் பிரச்​சினை. அணை கட்ட மத்​திய அரசு அனு​மதி அளிக்​கக் கூடாது. முதல்​வர் இதுதொடர்​பாக குழு அமைக்​கலாம். மத்​திய நீர் வளத்​துறை அமைச்​சரை சந்​தித்து வலி​யுறுத்த வேண்​டும். அரசி​யல் பார்க்​காமல் தமிழக அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாக இருக்க வேண்​டும்.

இஸ்​ரோ​வில் இருந்து விஞ்​ஞானிகள் பலர் வெளி​யேறு​வது அதிர்ச்​சிக்​குரியது. இது தடுக்​கப்பட வேண்​டும். இதற்கு பிரதமர்​தான் பதில் அளிக்க வேண்​டும். நாடாளு​மன்​றத்​தில் இதுதொடர்​பாக குரல் எழுப்​புவோம். எம்​.பி.க்​களுக்கு பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்ளன. போராட்டம் நடத்​தக் கூடாதுஎன்​பது ஜனநாயகத்​துக்கு எதி​ரானது. நாடாளு​மன்​றத்​தில் போராட்​டம் நடத்​துவோம். சிறை​களில் மரணம் என்​பது தமிழகத்​துக்கு மிகப்​பெரிய களங்​கத்தை ஏற்​படுத்​துகிறது. இச்​சம்​பவங்​கள் கண்​டிக்​கத்​தக்​கது. ஒரு சில காவலர்​களால் ஒட்​டுமொத்த காவலர்​களுக்​கும் களங்​கம் ஏற்​படு​கிறது. தமிழக காவல்​துறை சீரமைக்​கப்பட வேண்​டும்​. இவ்​வாறு கூறினார்​.

SCROLL FOR NEXT