தமிழகம்

சாகுபடி கணக்கெடுப்பு, உழவர் பதிவேடு பணி: கிராம நிர்வாக சங்கங்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மின்னணு சாகுபடி கணக்கீடு மற்றும் உழவர் பதிவேடு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்திரமோகன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம் ஆகிய 3 சங்கங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், ‘‘மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு, உழவர் பதிவேடு பணி ஆகிய பணிகளை முன்பு வருவாய்த்துறை செய்து வந்தது. தற்போது வேளாண்துறை மேற்கொண்டு வருகிறது.

அத்துறைக்கு வருவாய்த்துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களும் உதவி செய்து வருகிறோம். இந்த பணியில் இறுதி ஒப்புதல் அதிகாரம் வேளாண்துறை வசமே உள்ளது.

கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் இந்த பணியை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இறுதி ஒப்புதல் அதிகாரம் வருவாய்த்துறையிடமே இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் இரா.அருள்ராஜ் கூறும்போது ‘இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்’ என்று தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT