தமிழகம்

டாஸ்​மாக் மது​பானக்கூட உரிமையாளர்களிடம் பல கோடி ரூபாய் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூல்

முதல் தகவல் அறிக்​கை​யில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்​மாக் நிறு​வனத்​தில் ஒப்​பந்​தப் புள்​ளி, போக்​கு​வரத்து செல​வு, போலி ரசீது, பழைய பாட்​டில்​களுக்கு அதிக விலை நிர்​ண​யம் செய்​தது என பல கோடி ரூபாய்க்கு முறை​கேடு நடந்​துள்​ள​தாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்​துள்ள எஃப்​ஐஆரில் கூறப்​பட்டுள்​ளது.

டாஸ்​மாக் முறை​கேடு விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் விசாகன் உள்​ளிட்​டோர் மீதான வழக்கு தொடர்​பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் (எஃப்​ஐஆர்) கூறப்​பட்​டுள்​ள​தாவது:

டாஸ்​மாக் மது​பானக் கூடங்​களுக்​கான ஒப்​பந்​தப் புள்ளி திறக்​கப்​படும்​போது, சிலருக்கு மட்​டுமே அனு​மதி அளித்​துள்​ளனர். அந்த நபர்​களுக்கு ஆதர​வாக டாஸ்​மாக் நிறுவன அதி​காரி​கள் செயல்​பட்​டுள்​ளனர்.

சில இடங்​களில் மது​பானக் கூட ஒப்​பந்​தத்​தில், சிலர் தங்​களுக்​குள் சிண்​டிகேட் அமைத்து ஒரு வங்​கி​யில் தொடர்ச்​சி​யான வரிசை எண்​களை கொண்ட கேட்பு வரைவோலைகளை (டிடி) வழங்​கி​யுள்​ளனர்.

கோவை, நீல​கிரி, திருப்​பூர், ஈரோடு, நாமக்​கல்​,கரூர் மாவட்​டங்​களில் மொத்​தம் 857 டாஸ்​மாக் மது​பானக் கூடங்​கள் இருந்​தா​லும், 284 மது​பானக் கூடங்​கள் மூடப்​பட்​டிருப்​ப​தாக அரசு தரப்​பில் கூறப்​பட்​டது. ஆனால் அந்த 284 மது​பானக் கூடங்​களும், தங்​களது உரிமத்தை வழங்​காமல் தொடர்ந்து இயங்​கின. அரசு விதிப்​படி, மாதாந்​திர டிடி வழங்​கப்​பட​வில்லை என்​றால், அந்த மது​பானக் கூடம் மூடப்​பட்டு புதிய ஒப்​பந்​தப் புள்ளி கோரப்பட வேண்​டும். ஆனால் அவ்​வாறு இல்​லாமல், சட்​ட​விரோத​மாக மது​பானக் கூடங்​கள் இயங்​கின. இதனால் அந்த மாவட்​டங்​களில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, கடந்த 2022-23-ம் ஆண்​டு​களில் கோவை வடக்கு மாவட்டத்​தில் ரூ.17.27 கோடி, கோவை தெற்கு மாவட்​டத்​தில் ரூ.13.58 கோடி, நீல​கிரி மாவட்​டத்​தில் ரூ.1.96 கோடி அரசுக்கு இழப்பு ஏற்​பட்​டது. மது​பானக் கடைகளுக்கு சரக்​கு​களை கையாளுவதற்கு கோரப்​படும் போக்​கு​வரத்து துறை​யிலும் முறைகேடு நிகழ்ந்​துள்​ளது.

டாஸ்​மாக் கிடங்கு​களில் இருந்து கடைகளுக்கு மது பாட்​டில்​களை கொண்டு செல்​வதற்கு போக்​கு​வரத்​துக்கு ரூ.100 கோடி செல​விடப்​படு​கிறது. இதி​லும் முறை​கேடு நடந்​துள்​ளது. மது​பானக் கூடத்தை ஒப்​பந்​தம் பெற்ற நபர்​களே நடத்​தாமல், மூன்​றாம் நபர்​கள் நடத்​தினர். சிலர் பணத்தை செலுத்தி டிடி எடுத்​து, வேறு ஒரு​வர் பெயரில் ஒப்​பந்​தம் எடுத்​து​விட்​டு, இறு​தி​யில் மற்​றொரு​வர் பெயரில் மது​பானக் கூடத்தை நடத்​தி​யுள்​ளனர்.

கரூர் மாவட்​டத்​தில் மூலனூர் எஸ்​.​கார்த்​திக் மற்​றும் ‘கரூர் கேங்’ என்ற அதி​கார கும்​பலும் அனைத்து டாஸ்​மாக் மது​பானக் கூடங்​களை​யும் நடத்​தி​யுள்​ளன. இந்த கும்​பல் மாநிலம் முழு​வதும் டாஸ்​மாக் நிறுவன அதி​காரி​களிடம் பல்​வேறு வகை​களில் அழுத்​தம் கொடுத்​து, முறை​கேடு​களில் ஈடு​பட்​டுள்​ளது. ‘பார்ட்டி ஃபண்ட்​(கட்சி நிதி)’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் டாஸ்​மாக் மது​பானக் கூட உரிமை​யாளர்​களிடம் ‘கரூர் கேங்’, பெரும் தொகையை வசூல் செய்​துள்​ளது.

இதே​போல பழைய மது​பாட்​டில்​களை பெறு​வ​தி​லும் மது​பான நிறு​வனங்​கள், டாஸ்​மாக் நிறுவன அதி​காரி​கள் இணைந்து முறை​கேட்​டில் ஈடு​பட்​டுள்​ளனர். முக்​கிய​மாக போலி ரசீதுகளை வழங்​கி​யும், பழைய பாட்​டில்​களுக்கு அதிக விலை நிர்​ண​யம் செய்​தும் இந்த முறை​கேடு நடந்​துள்​ளது.

டாஸ்​மாக் முன்​னாள் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.​வி​சாகன் ஐஏஎஸ், சில மது​பான நிறு​வனங்​களுக்கு சாதக​மாக செயல்​பட்​டுள்​ளார்.

டாஸ்​மாக் நிறு​வனத்​தின் நிர்​வாகத்​தில், செந்​தில் பாலாஜி​யின் நெருங்​கிய நண்​ப​ரான ரதேஷ் ராஜ் சண்​முகவேல் ஆதிக்​கம் செலுத்​தி​யுள்​ளார். பெரிய அதி​கார மைய​மாக செயல்​பட்​டுள்​ளார் இவரே எந்த நிறு​வனத்​தில் இருந்து மது​பாட்​டில்​களை கொள்​முதல் செய்ய வேண்​டும், மது​பானக் கூட உரிமம் வழங்​கு​வது, அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் குறித்து முடிவு எடுத்​துள்​ளார்.

மது​பானக் கடைகளில் நிர்​ணயிக்​கப்​பட்ட விலை​யை​விட ஒரு பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடு​தலாக வசூலித்து முறை​கேடு நடந்​துள்​ளது. வெளி​நாட்​டில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்டு விற்​கப்​படும் ஒரு மது​பாட்​டிலுக்​கு, நிர்​ண​யிக்​கப்​பட்ட விலை​யை​விட கூடு​தலாக ரூ.500 வரை வசூலிக்​கப்​பட்​டுள்​ளது என்று எஃப்​ஐஆரில்​ குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT