தமிழகம்

கொளக்கி அம்மன் கோயில் தேரோட்ட விழாவில் பட்டியலினத்தோர் பகுதிக்கு தேர் வர சிபிஎம் கோரிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோயிலில் நடைபெறும் தேரோட்ட விழாவில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தத் தேரோட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும்படி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.நேரு, நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT