மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி, இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். உடன் கட்சி நிர்வாகிகள்.

 
தமிழகம்

மதுராந்தகம் தொகுதி இருளர் குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு; அரசால் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? - மார்க்சிஸ்ட் வேட்பாளர் கேள்வி

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் தொகு​தி​யில் இருளர் பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் முறை​யாக கிடைக்​க​வில்லை என்​றும் குழந்​தைகள் ரத்​தசோகை​யால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர்​களுக்​காக ஒதுக்​கப்​படும் அரசு நிதி எங்கே செல்​கிறது என்​றும் மார்க்​சிஸ்ட் வேட்​பாளர் பா.சுகந்தி கேள்வி எழுப்​பி​னார்.

மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட கத்திரிசேரி, விழுதமங்கலம், முன்னித்திப்பம், வளர்பிறை, முள்ளி, தேவாதூர், அருங்குணம், அகத்திப்பட்டு, புலியரண்கோட்டை, தென்னம்பட்டு, கீரல்வாடி, மேலகண்டை, அத்திவாக்கம், கீழ்கண்டை, தர்மாபுரம், ஜல்லிமேடு, அவுரிமேடு, சித்திரவாடி, முதுகரை, வசந்தவாடி, புலிக்கொரடு, ஆமயம்பட்டு, தாதங்குப்பம், பாக்கம், வயலூர், ஒழுப்பாக்கம், மேல்சிலாவட்டம், கீழ்சிலாவட்டம், ஐயனார் கோயில், சிறுகளத்தூர் பகுதிகளில் அவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது நூறு நாள் வேலைத் திட்​டப் பணி​யாளர்​கள் மற்​றும் இருளர் பழங்​குடி​யின மக்​களை சந்​தித்து வாக்கு சேகரித்த அவர், பின்​னர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இருளர் பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் இன்​றள​வும் அடிப்​படை வசதி​கள் இல்​லை. குழந்​தைகள் ரத்​தசோகை​யால் பாதிக்​கப்​பட்​டு உள்ளனர். இப்பகுதி மாணவர்​கள் பள்​ளிப் படிப்பை தொடர முடி​யாத நிலை இருப்​பதும் அரசின்கவனத்​துக்கு வரவில்​லை​யா, இம்​மக்​களுக்​காக அரசு ஒதுக்​கும் நிதி முழு​மை​யாக அவர்​களைச் சென்​றடை​யாதது ஏன்? இவ்​வாறு கேள்வி எழுப்​பி​னார்.

மேலும், தான் வெற்றி பெற்​றால் இருளர் மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள், மருத்​து​வம் மற்​றும் கல்விவசதி​கள் கிடைக்​க​வும், மாணவர்​கள் தொடர்ந்து கல்வி பயில​வும்உரிய நடவடிக்​கைகளுக்​காக போ​ராடு​வேன் என உறு​தி​யளித்​து வாக்​கு சேகரித்​தார்​. அவருடன் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

SCROLL FOR NEXT