சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சார பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பாடல்களை வெளியிட்டு பேசுகையில், “இந்தத் தேர்தலில் மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கையும் எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், இந்த பாடல்களை உருவாக்க இசையமைப்பாளர் நியூ கோடீஸ்வரன், பாடகர் பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், இந்த ஆக்கபூர்வமான முயற்சிகள் பிரச்சாரக் களத்தில் கட்சிக்கு பெரும் வலுசேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.