தமிழகம்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது - உடனடியாக விடுவிக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

வேட்டையன்

சென்னை: தலைநகர் சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறை அல்ல.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT