தமிழகம்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீவை​குண்​டத்​தில் இளம்​பெண் கூட்டுப் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்ட சம்​பவத்​தில் தொடர்​புடைய ஆளும் கட்சி நிர்​வாகி​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில், “ஸ்ரீவை​குண்​டம் இளம்​பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையில் தவெக நிர்​வாகி​கள் ஈடு​பட்​டுள்ள நிகழ்வு தமிழகம் முழு​வதும் அதிர்ச்சி அலையை உரு​வாக்​கி​யுள்​ளது.

காவல் துறை​யில் புகார் அளிக்​கக் கூடாது என எம்​எல்ஏ வி.ஜி.சர​வணன் மிரட்​டியதாக அப்​பெண் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நிவாரண​மும், அரசு வேலை​யும், பாது​காப்​பும் வழங்க வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT