தமிழகம்

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு முழு உடல் பரிசோதனை மேற்​கொண்ட ஓமந்தூரார் அரசு பல்​நோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அக்​கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை ஓமந்​தூ​ரார் பல்​நோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் முழு உடல் பரிசோதனை மையத்​தில், கடந்த 2018 முதல் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு முழு உடல் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வெளிவந்​துள்​ளன.

ரத்​தப் பகுப்​பாய்​வு, புற்​று​நோயை தொடக்க நிலை​யிலேயே கண்​டறிவது உட்பட நூற்​றுக்​கும் மேற்​பட்ட பரிசோதனை​கள் இம்​மருத்​து​வ​மனை​யில் செய்​யப்​படு​வது வரவேற்​புக்​குரியது.

கரோனா தொற்று காலத்​தி​லும் கூட தொய்​வின்​றி, இம்​மருத்​து​வ​மனை​யின் முழு உடல் பரிசோதனை மையம் சிறப்​பாக செயல்​பட்​டது. மருத்​து​வ​மனைக்​கும், மருத்​து​வ​மனை​யில் அர்ப்​பணிப்​போடு பணி​யாற்றி வரும் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், மருத்​து​வப் பணி​யாளர்​கள் அனை​வருக்​கும் பாராட்​டு​கள்.

இத்​தகைய பரிசோதனை வசதி​களை அனைத்து அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் மற்​றும் மாவட்ட மருத்​து​வ​மனை​களி​லும் அரசு உரு​வாக்க வேண்​டும். அதே​போல் அரசு மருத்​து​வ​மனை​களில் அனைத்து மருத்​து​வப் பரிசோதனை​களை​யும், சிகிச்​சைகளை​யும் கட்​ட​ணமில்லா சேவை​யாக வழங்க வேண்​டும்.

மேலும் ஓமந்​தூ​ரார் பல்​நோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை உட்பட அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் ஒப்​பந்​தம் மற்​றும் தற்​காலிக அடிப்​படை​யில் பணிபுரி​யும் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் மற்​றும் மருத்​துவப் பணி​யாளர்​களுக்கு பணிப் பாது​காப்​பு, சம வேலைக்கு சம ஊதி​யம் மற்​றும் பணிநிரந்​தரம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT