மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூ. இல்லை: மு.வீரபாண்டியன் கருத்து

செய்திப்பிரிவு

கோவை: ​தி​முக கூட்​ட​ணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி இல்லை என, கோவை​யில் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்தார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: வரும் காலங்​களில் இடது​சா​ரி​கள், ஜனநாயக சக்​தி​கள் தமிழ்​நாட்​டின் நலனுக்​காக, உரிமைக்​காக ஒன்​றிணைந்து செயல்​படு​வ​தாக முடிவு எடுத்​துள்​ளோம். இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​பட்​ட​வுடன் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக் குழு கூடி தேர்​தல் வியூ​கம் அமைப்​போம். தற்​போதைய சூழ்​நிலை​யில் திமுக கூட்​ட​ணி​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி இல்​லை.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்​கள் தீர்ப்​புக்கு மதிப்பு அளித்​து, 108 இடங்​கள் வென்ற தவெக​வுக்கு வெளி​யில் இருந்து ஆதரவு அளிக்​கிறோம். நாங்​கள் சட்​டப்​பேர​வை​யில், மக்​களவை​யில் இல்​லாமல் இருந்​தா​லும் தெருக்​களில் எங்​கள் குரல் ஒலிக்​கும். ஆட்​சி​யின் தவறுகளை மூடி மறைக்​க​மாட்​டோம். நல்​லது செய்​தால் வரவேற்​போம். தவெக தேர்​தல் வாக்​குறு​தி​களை நிறைவேற்ற உரிய கால அவகாசம் எடுத்​துக் கொள்​ளலாம். ஆனால் சட்​டம் ஒழுங்கை பாது​காப்​ப​தில் கால அவகாசம் கூடாது. இளைஞர்​கள், மாணவர்​கள், பெண் குழந்​தைகள் மீதான தாக்​குதலை, ஒன்​றுகூடி எதிர்க்க வேண்​டும்.

திருப்​பரங்​குன்​றம் விஷ​யத்​தில் கடந்த அரசின் நிலைப்​பாட்டை தொடர்ந்​ததை வரவேற்​கிறோம். மத்​திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்​லுறவு இருந்​தால், அதை நாங்​கள் எதிர்க்​க​மாட்​டோம். இந்த உறவால் மத்​திய அரசு திணிக்​கும் வலை​யில் விழுந்​து​விடக்​கூ​டாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்.

SCROLL FOR NEXT