இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழு கூடுகிறது: தொகுதி பங்கீடு குறித்து இன்று இறுதி முடிவு

செய்திப்பிரிவு

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செயற்​குழு கூட்​டம் இன்று கூடு​கிறது. இதில் திமுகவுடன் தொகுதி பங்​கீடு குறித்து இறுதி முடிவு எட்​டப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் அங்​கம் வகித்து வரும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்​கான இடங்​களை ஒதுக்​கீடு செய்​வ​தில் இழுபறி நீடித்து வரு​கிறது. இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மூன்று கட்ட பேச்​சு​வார்த்​தைகளை முடித்​திருக்​கிறது. ஆனாலும் இது​வரை தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

          

காங்​கிரஸ் கட்​சிக்கு கூடு​தல் தொகு​தி​கள், கூட்​ட​ணிக்​குள் தேமு​திக வருகை என தற்​போதைய சூழலால் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு 2021-ல் ஏற்​கெனவே வழங்​கப்​பட்ட 6 தொகு​தி​களில் ஒன்றை குறைத்து 5 ஆக வாங்​கிக்​கொள்​ளு​மாறு திமுக தொடர்ச்​சி​யாக வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால் அதனை ஏற்​றுக்​கொள்ள மறுத்து ஏற்​கெனவே வழங்​கப்​பட்ட 6 தொகு​தி​களை​யா​வது வழங்​கு​மாறு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வலி​யுறுத்தி கொண்​டிருக்​கிறது.

இதை​யொட்டி நடை​பெறும் ஒவ்​வொரு கட்ட பேச்​சு​வார்த்​தைக்​கும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில நிர்​வாகக் குழு கூட்​டத்தை கூட்​டி, முடிவு​களை பரிசீலித்து வரு​கிறது.

அந்​தவகை​யில் திமுக தற்​போது நான்​காம் கட்ட பேச்​சு​வார்த்​தைக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சியை அழைத்​திருக்​கிறது. தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில் இது இறு​தி​கட்ட பேச்​சு​வார்த்​தை​யாக இருக்​கலாம். இதை​யொட்டி கட்​சி​யின் மாநிலக் குழுக் கூட்​டம், தி.நகர் பாலன் இல்​லத்​தில் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் தேர்​தலுக்​காக உறுப்​பினர் சேர்த்​தல் மற்​றும் புதுப்​பித்​தல், கட்சி நிதி, மக்​களிடம் இருந்து பெறப்​பட்ட நிதி உள்​ளிட்​டவை குறித்து கிளை வாரி​யாக விவா​திக்​கப்​பட்​டது. முக்​கிய​மாக தொகுதி பங்​கீடு குறித்து இது​வரை திமுக​வுட​னான பேச்​சு​வார்த்​தை​யில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்து கட்​சி​யின் செயற்​குழு கூட்​டம் இன்று (மார்ச் 16) கூடு​கிறது. இதில் எடுக்​கப்​படும் முடிவு​களின் அடிப்​படை​யில் திமுக​வுட​னான 4-ம் கட்ட பேச்​சு​வார்த்​தைக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி செல்​லும் எனவும், தொகுதி பங்​கீடு இன்று அல்​லது நாளை முடிவடைய​லாம் எனவும் எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT