தமிழகம்

தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும் - இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்க்​கான வாய்ப்பு கம்​யூனிஸ்ட்​களால் தடைபட்​டு​விடக்​கூ​டாது, அதனால், தவெகவுக்கு வெளி​யில் இருந்து ஆதரவு அளிப்​ப​தாக​வும், அதே​நேரம் திமுக​வுட​னான உறவு தொடரும் என்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் அறி​வித்​துள்​ளன.

சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களில் வெற்றி பெற்​றும் பெரும்​பான்மை கிடைக்​காத​தால் காங்​கிரஸ், விசிக, கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகளிடம் தவெக ஆதரவு கோரி​யிருந்​தது.

இதில் காங்​கிரஸ் கட்சி 5 எம்​எல்​ஏக்​களு​டன் ஆதரவு அளித்​து​விட்ட நிலை​யில், தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பது தொடர்​பாக இந்​திய மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மாநில செயற்​குழு, மாநிலக் குழு கூட்​டத்தை சென்​னை​யில் நேற்று கூட்​டி​யிருந்​தன.

அதன்​முடி​வில், இரு கட்​சிகளும் தலா 2 எம்​எல்​ஏக்​களு​டன் தவெக​வுக்கு தங்​களது ஆதரவை வழங்​கு​வ​தாக தெரி​வித்​து, தவெக துணைப் பொதுச்​செய​லா​ளர் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மாரிடம் ஆதரவு கடிதங்​ களை வழங்​கினர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் எந்​தவொரு கட்​சிக்​கும், கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை.

இத்​தகைய சூழலில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு அரசாங்​கம் அமைய வேண்​டியது அவசி​யம். அது​வும் வரும் 10-ம் தேதிக்​குள் (நாளை) அமைக்க வேண்​டும். இல்​லை​யென்​றால் ஆளுநர் ஆட்சி அமல்​படுத்​தப்​படும் என்ற நெருக்​கடி​யான சூழல் ஏற்​பட்​டிருக்​கிறது.

ஆளுநர் ஆட்சி என்​பது பாஜக கொல்​லைப்​புற வழி​யாக ஆட்சி நடத்​து​வ​தாக தான் அமை​யும். தேர்​தலில் தோல்வி அடைந்​திருந்​தா​லும் ஆளுநர் மூலம் தமிழகத்​தில் ஆட்சி நடத்​து​வது என்​கிற நோக்​கத்​துடன், பாஜக இத்​தகைய முயற்​சிகளில் ஈடு​பட்​டிருக்​கிறது.

இதை முறியடிக்க வேண்​டும் என்ற நோக்​கத்​துடன் தவெக ஆட்சி அமைக்க இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் வெளி​யில் இருந்து நிபந்​தனையற்ற ஆதரவு அளிப்​பது என்று தீர்​மானித்​துள்​ளோம். அதே​நேரம் அமைச்​சர​வை​யில் பங்​கேற்க மாட்​டோம்.

இன்​னொரு தேர்​தலை தவிர்ப்​ப​தற்​காக​வும், ஆளுநர் ஆட்​சியை தடுப்​ப​தற்​காக​வும் வேறு எந்த அரசி​யல் நிலைப்​பாட்​டை​யும் எடுக்க முடி​யாது என்​ப​தால் தவெக​வுக்கு தற்​போது ஆதரவு அளிக்​கிறோம்.

அதே​நேரம் எதிர்​காலத்​தில் மாநில உரிமை​களை பாது​காப்​பது, மதவெறி நடவடிக்​கைகளுக்கு எதி​ராக போராடு​வது என மாநில நலன் சார்ந்த பிரச்​சினை​களில், ஒரு​மித்த கருத்​துடைய பிரச்​சினை​களில் திமுக​வுட​னான எங்​களது உறவு தொடரும்.

அதே​போல் நாங்​கள் எங்​களது நிலைப்​பாட்டை எடுத்​திருக்​கிறோம். இதில் திமுக​வின் ஒப்​புதல் எங்​களுக்கு எதற்​கு? அடுத்து வரக்​கூடிய உள்​ளாட்சி தேர்​தலை அப்​போது பார்த்​துக்​கொள்​ளலாம்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: இந்​திய ஜனநாயகத்​தில் இது​போன்ற ஏற்ற இறக்​கங்​கள் வரு​வது இயல்​பு. மக்​கள் தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு வாய்ப்​பளித்து இருக்​கிறார்​கள். அந்த வாய்ப்பை முழு நிறைவு செய்​வதற்​காக எங்​களிடம் ஆதரவு கோரி​னார்​கள்.

இதையடுத்து, முறைப்​படி கட்சி கமிட்​டி​யில் விவா​தித்​து, விஜய்க்கு ஆதரவு தர முடிவு எடுத்​திருக்​கிறோம். தமிழக மக்​கள் ஜனநாயகத்தை முன்​மொழிந்​திருக்​கிறார்​கள். நாங்​கள் வழிமொழிந்​திருக்​கிறோம்.

விஜய்க்​கான வாய்ப்பு கம்​யூனிஸ்ட்​களால் தடைபட்​டு​விடக்​கூ​டாது. இது கூட்​டணி அல்ல, ஆதர​வு. இனிவரும் காலங்​களில் விஜய் தமிழகர்​களின் உரிமை​களுக்​காக, ஜனநாயகத்​துக்​காக, மதச்​சார்​பின்​மைக்​காக உரத்த குரல் எழுப்ப வேண்​டும்.

அவருக்கு இடது​சா​ரி​கள் உறு​துணை​யாக இருப்​போம். இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் எடுக்​கிற அரசி​யல் நிலைப்​பாட்​டை, தான் அப்​படியே ஆதரிப்​ப​தாக விசிக தலை​வர் திரு​மாவளவனும் தெரி​வித்​துள்​ளார். இதைப்​பற்​றி அவர்​ தெரி​விப்​பார்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT