தமிழகம்

நீர்வரத்து குறைந்ததால் நிறைவுபெறும் குற்றால சாரல் சீசன்

செய்திப்பிரிவு

தென்காசி: மழை​யின்றி வறண்ட வானிலை நில​வுவ​தால் குற்​றாலம் அருவி​களில் நீர்வரத்து குறைந்​துள்​ளது. பிர​தான அரு​வி, ஐந்​தரு​வி, பழைய குற்​றாலம் அருவி​களில் தண்​ணீர் குறை​வாக விழுந்த நிலை​யில், விடு​முறை தின​மான நேற்று சுற்​றுலாப் பயணி​கள் கூட்​டம் மித​மாக இருந்​தது.

தென்​மேற்கு பரு​வ​மழைக் கால​மான ஜூன் முதல் செப்​டம்​பர் மாதம் வரை தென்​காசி மாவட்​டத்​தில் மேற்​குத் தொடர்ச்சி மலையையொட்​டிய பகு​தி​களில் சாரல் மழை பொழி​யும். நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழை​யால் தென்​காசி மாவட்​டத்​தின் முக்​கிய நீர் ஆதா​ரங்​களான கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்​பாநதி அணை, அடவிந​யி​னார் அணை, குண்​டாறு அணை ஆகியவை நீர்​வரத்து பெறும்.

தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரமடைந்​தால் அணை​கள் முழு கொள்​ளளவை எட்​டும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்​ய​வில்​லை. குண்​டாறு அணை மட்​டுமே முழு கொள்​ளளவை எட்​டியது.

மலைப்​பகு​தி​யில் அவ்​வப்​போது பெய்த மழை​யால் குற்​றாலம் அருவி​கள் சில நாட்​கள் ஆர்ப்​பரித்து கொட்​டின. ஆனால் மழை நீடிக்​காமல் அடுத்த சில நாட்​களில் வறண்ட வானிலை நில​வியது. கடந்த ஒரு வார​மாக பகலில் வெயி​லின் தாக்​கம் அதி​கரித்​துள்​ளது. சாரல் இல்​லாத​தால் வறண்ட காற்று வீசுகிறது. இதனால் குற்​றாலம் அருவி​களில் நீர்வரத்து குறைந்​துள்​ளது.

சாரல் சீஸன் முடிவுக்கு வரு​வ​தால் நேற்று மித​மான அளவிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்​தது. வெயி​லின் தாக்​கம் அதி​கரித்​துள்ள நிலை​யில் சாரல் மழை இல்​லாத​தால் குற்​றாலத்​தி​லும் பகலில் வெப்​பத்​தின் தாக்​கம் அதி​க​மாக இருந்​தது. ஐந்​தரு​வி, பிர​தான அரு​வி, சிற்​றரு​வி, புலியரு​வி, பழைய குற்​றாலம் அருவி ஆகிய​வற்​றில் நீர் வரத்து குறை​வாக இருந்​த​தால் சுற்​றுலாப் பயணி​கள் ஏமாற்​றம் அடைந்​தனர். வெயில் அதி​கரித்​துள்ள நிலை​யில், அருவி​களில் குறை​வாக விழுந்​தா​லும் குளிர்ந்​திருந்த நீரில் சுற்​றுலாப் பயணி​கள் குளித்​துச் சென்​றனர்.

SCROLL FOR NEXT