தமிழகம்

தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் பெண்​களுக்கு ஊதி​யத்​துடன் கூடிய மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு ஆலோ​சிக்​கலாம் என தெரி​வித்து இதுகுறித்து அரசு அதி​காரி​கள் வரும் 28-ம் தேதி பதில் அளிக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை கோம​திபுரத்​தைச் சேர்ந்த நர்​மதா என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் பல பெண் பணி​யாளர்​கள், கடுமையான மாத​வி​டாய் வலியால் சமாளித்​த​படியே பணி​யாற்ற வேண்​டிய நிலை உள்​ளது. அவர்களுக்கு மாத​வி​டாய் கால விடுப்பு வழங்​கும் சாத்​தி​யக் ​கூறுகளை ஆய்வு செய்ய மாநில அளவி​லான குழுவை அமைக்​க​வும் முழு​மை​யான ஊதி​யத்​துடன் கூடிய விடுப்பு வழங்​கு​வது குறித்த கொள்​கையை அரசு உரு​வாக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் சி.​வி.​கார்த்​தி​கேயன், சக்​திவேல் ஆகியோர் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், தற்​போது தமிழகத்​தில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இப்​போது மனு​தா​ரரின் கோரிக்​கையை நிறைவேற்​று​வது குறித்து அரசு உரிய ஆலோ​சனை நடத்​தலாமே, இதில் நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் பெண் ஊழியர்​கள் மட்​டுமல்​லாமல் அன்​றாட வேலைக்​குச் செல்​லும் பெண்​களும் பயன்​பெறும் வகை​யில் உரிய முடிவு எடுக்​கலாமே என கேள்வி எழுப்​பினர்.

பின்​னர், இது தொடர்​பாக அதி​காரி​கள் 28-ம் தேதி பதில் அளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளிவைத்​தனர்.

SCROLL FOR NEXT