மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரிய வழக்கில் சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தொல்லியல் துறை பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் இந்து அறநிலையத் துறையின் அறிவிப்பை ரத்து செய்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 6-ம் நூற்றாண்டிலிருந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. தற்போது கோயில் நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்க மறுக்கிறது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் 10 மைல் தொலைவுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே தீபத்தூண் அமைக்கப்பட்டது. அங்கு தீபம் ஏற்றாமல், மோட்ச தீபம் ஏற்றும் இடத்தின் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, மற்றொரு மனுதாரர் தரப்பில் "மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிற மதத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு தீபம் ஏற்றினால் பிரச்சினை வரும் என்று தமிழக அரசும், அறநிலையத் துறையும்தான் தெரிவிக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில், "100 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் இல்லாத ஒன்றை உரிமை யாககோருவது எப்படி? பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, "மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கோரியுள்ளனர்" என்றார். அதற்கு அரசுத் தரப்பில், "உச்சிப் பிள்ளையார் கோயிலும் மலை மீது தான் உள்ளது. பக்தர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஏற்றப்பட்ட இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம்" எனக் கூறப்பட்டது.
இதேபோல, மற்றொரு மனுதாரர் தரப்பில் "மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிற மதத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு தீபம் ஏற்றினால் பிரச்சினை வரும் என்று தமிழக அரசும், அறநிலையத் துறையும்தான் தெரிவிக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில், "100 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் இல்லாத ஒன்றை உரிமை யாககோருவது எப்படி? பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, "மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கோரியுள்ளனர்" என்றார். அதற்கு அரசுத் தரப்பில், "உச்சிப் பிள்ளையார் கோயிலும் மலை மீது
தான் உள்ளது. பக்தர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஏற்றப்பட்ட இடத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றலாம்" எனக் கூறப்பட்டது.
மதுரை மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதிடும்போது, "உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை விளக்கு ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில், தீபத்தூண், குதிரைச்சுனை ஆகிய இடங்களில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் எந்த நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. அதன்படி, கார்த்திகை தீபம் ஏற்ற தொல்லியல் துறையிடமும் முறையான அனுமதி பெற வேண்டும்" என வாதிடப்பட்டது.
பின்னர் நீதிபதி, இந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா தரப்பையும், மத்திய தொல்லியல் துறையையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
நீதிபதி திடீர் ஆய்வு: இதற்கிடையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை திடீரென திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மலை உச்சி வரை சென்ற அவர், உச்சியில் உள்ள தீபத்தூணையும், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தற்போது கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தையும் பார்வையிட்டார்.