தமிழகம்

மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு வழக்கு நிலை என்ன? - சிபிஐ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது பதிவு செய்​யப்​பட்ட நகை திருட்டு வழக்​கின் தற்​போதைய நிலை குறித்து அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு, சிபிஐக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அரு​கே​யுள்ள மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார், நகை திருட்டு வழக்கு தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸா​ரால் விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப்​பட்​டார். போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்​தார்.

          

இந்த வழக்​கில் தனிப்​படை காவலர்​கள் கண்​ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர், வழக்கு விசா​ரணையை உயர் நீதி​மன்​றம் சிபிஐக்கு மாற்​றியது.

சிபிஐ விசா​ரணை நடத்தி மதுரை 5-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது. அதில், தனிப்​படை வேன் ஓட்​டுநரும், காவலரு​மான ராமச்​சந்​திரன் 6-வது குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்​டார். பின்​னர் அவரும் கைது செய்​யப்​பட்​டார்.

கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், சிறப்பு உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோரது பெயர்​கள் சேர்க்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், தனிப்​படைக் காவலர்​கள் கண்​ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்​கரமணி​கண்​டன் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​கள் நீதிபதி எஸ்​.ஸ்ரீமதி முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது உயி​ரிழந்த அஜித்​கு​மாரின் தாயார் தரப்​பில், தனிப்​படை காவலர்​களுக்கு ஜாமீன் வழங்க ஆட்​சேபம் தெரி​வித்து இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

வழக்​கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும்​போது, “அஜித்​கு​மார் காவல் மரணம் தொடர்​பான வழக்​கில்​தான் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அஜித்​கு​மார் மீது நிகிதா என்​பவர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்த நகை திருட்டு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரித்​து, குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் காலக்​கெடு விதித்​திருந்​தது.

விசாரணை பாதிக்கும்... எனினும், அந்த வழக்​கில் இது​வரை குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வில்​லை. அந்த வழக்​கின் விசா​ரணை எந்த நிலை​யில் இருக்​கிறது என்​பது தெரிய​வில்​லை. விசா​ரணை நிலு​வை​யில் இருக்​கும்​போது, தனிப்​படை காவலர்​களுக்கு ஜாமீன் வழங்​கி​னால் விசா​ரணை பாதிக்​கப்​படும்” என்​றார்.

சிபிஐ தரப்​பிலும் தனிப்​படை காவலர்​கள் 5 பேருக்​கும் ஜாமீன் வழங்க ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி, அஜித்​கு​மார் மீது பதிவு செய்​யப்​பட்ட நகை திருட்டு வழக்​கின் தற்​போதைய நிலை குறித்து சிபிஐ பதில் அளிக்​கு​மாறு உத்​தர​விட்​டு, விசா​ரணையை பிப். 2-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தார்​.

SCROLL FOR NEXT