தமிழகம்

முஸ்லிம் அல்லாத இருவரை சேர்க்காததால் மாநில வக்பு வாரியம் செயல்பட நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

சென்னை: முஸ்லிம் அல்​லாத இரு உறுப்​பினர்​களை வாரி​யத்​தில் சேர்க்​காத​தால் மாநில வக்பு வாரி​யம் செயல்பட இடைக்​காலத் தடை விதித்து உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது.

வழக்​கறிஞர் சவு​கத் அலி முகமது என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தொடர்ந்த வழக்கில், திருத்​தப்​பட்ட புதிய வக்பு வாரிய சட்​டத்​தின் பிரிவு 14-ன்​படி மொத்த உறுப்​பினர்​களில் இரு​வர் முஸ்லிம் அல்​லாதவர்​கள், பார் கவுன்​சில் உறுப்​பினர் ஒரு​வர் என குழு​வில் இடம்​பெற வேண்​டும். ஆனால் இதை பின்​பற்றி தமிழ்​நாடு வக்பு வாரி​யம் அமைக்​கப்​பட​வில்லை என்​ப​தால் அதன் செயல்​பாடு​களுக்கு தடை விதிக்க வேண்​டும்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ரவி ஆஜராகி, திருத்​தப்​பட்ட வக்​பு வாரிய சட்​டத்​தின்​படி தமிழ்​நாடு வக்​பு​ வாரி​யம் மறுசீரமைக்​கப்​பட​வில்லை என்​ப​தால் அதன் செயல்​பாடு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என வாதிட்​டார். பதி​லுக்கு அரசு தரப்​பில் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் தமிழ்​நாடு வக்பு வாரி​யம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆஜராகி வாதிட்​டனர். மத்​திய அரசு தரப்​பில் வழக்​கறிஞர் வி.டி.​பாலாஜி ஆஜராகி வாதிட்​டார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், தமிழ்​நாடு வக்பு வாரி​யம் தொடர்பாக தமிழக அரசு பிறப்​பித்த அரசாணையை நிறுத்தி வைத்​தும், தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​தின் செயல்​பாடு​களுக்கு தடை விதித்தும் விசா​ரணையை தள்ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT