தமிழகம்

பொறுப்பு மகளிர் காங்கிரஸ் தலைவர் நியமன சர்ச்சை: செல்வப்பெருந்தகை, ஹசீனா ஆதரவாளர்கள் மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மகளிர் காங்​கிரஸுக்கு புதிய பொறுப்​புத் தலை​வர் நியமிக்​கப்​பட்​ட​தில், செல்​வப்​பெருந்​தகை, ஹசீனா சையத் ஆதர​வாளர்​கள் மோதிக்​கொண்​ட​தால் சத்​தி​யமூர்த்தி பவனில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

தமிழ்​நாடு மகளிர் காங்கிரஸ் தலை​வி​யாகப் பதவி வகித்து வந்​தவர் ஹசீனா சையத். நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட அவர் வாய்ப்பை எதிர்​பார்த்த நிலை​யில், செல்​வப்​பெருந்​தகை தரப்பு முட்​டுக்​கட்டை போட்​ட​தால் அவருக்கு சீட் கிடைக்​க​ வில்லை என்று கூறப்​படு​கிறது.

          

இதனால் விரக்​தி​யடைந்த ஹசீனா சையத் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். மேலும், செல்​வப்​பெருந்​தகை மற்​றும் மல்​லி​கார்​ஜுன கார்கே குறித்து அவர் அளித்த பேட்​டி​யும் தமிழக அரசி​யல் களத்​தில் விவாதப் பொருளானது.

இப்​படி​யான சூழலில்​தான், நேற்று சத்​தி​யமூர்த்தி பவனில் மகளிர் காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்​கான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. அகில இந்​திய மகளிர் காங்​கிரஸ் தலை​வர் அல்கா லம்பா தலை​மை​யில் நடை​பெற்ற இக்​கூட்​டத்​தில், தமிழகம் முழு​வ​தி​லும் இருந்து ஏராள​மான நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர்.

கூட்​டத்​தில், “தமிழக மகளிர் காங்​கிரஸ் பொறுப்​புத் தலை​வ​ராக ராமலட்​சுமி நியமிக்​கப்​படு​கிறார். இவர் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பணி​களை கவனிப்​பார், அவருக்கு அனை​வரும் ஒத்​துழைப்பு தர வேண்​டும்” என அறிவிக்​கப்​பட்​டது. இந்த அறி​விப்​புக்கு அங்​கிருந்த பெரும்​பாலான நிர்​வாகி​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

“கட்​சி​யில் பல ஆண்​டு​களாக அர்ப்​பணிப்​புடன் பணி​யாற்​றிய​வர்​களைக் கலந்​தாலோ​சிக்​காமல், தன்​னிச்​சை​யாகப் புதிய ஒரு​வரை மாநிலத் தலை​வி​யாக அறி​வித்​ததை ஏற்க முடி​யாது” எனக்​கூறி நிர்​வாகி​கள் ரகளை​யில் ஈடு​பட்​டனர். இதற்கு ராமலட்​சுமி தரப்​பினர் எதிர்ப்பு தெரிவிக்​கவே, இருதரப்​புக்​கும் இடையே மோதல் வெடித்​தது.

ஆத்​திரமடைந்த தொண்​டர்​கள் நாற்​காலிகளை எடுத்து ஒரு​வர் மீது ஒரு​வர் வீசிக்​கொண்​ட​தால் போர்க்​கள​மானது. இந்த மோதலில் சிலருக்கு லேசான காயங்​களும் ஏற்​பட்​டன. இதையடுத்து குறுக்​கிட்ட அல்கா லம்​பா, “தற்​போதைக்கு ராமலட்​சுமி​தான் மாநிலத் தலை​வ​ராகச் செயல்​படு​வார். தேர்​தல் முடிந்த பிறகு முறை​யாக மாநிலத் தலை​வர் அறிவிக்​கப்​படு​வார்.

இதை அனை​வரும் ஏற்க வேண்​டும்; மீறு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என எச்​சரித்​தார். அதன் பின்​னரே மோதலில் ஈடு​பட்​ட​வர்​கள் சமா​தானமடைந்​தனர்.

28 இடங்​களில் 2 பெண்​

இதுகுறித்து மகளிர் காங்​கிரஸ் நிர்​வாகி​கள் தரப்​பில் கூறுகை​யில், “தொடர்ச்​சி​யாக மகளிர் காங்​கிரஸ் புறக்​கணிக்​கப்​பட்டு வரு​கிறது. தேர்​தலில் 33 சதவீத இட ஒதுக்​கீடு கேட்​டுத் தீர்​மானம் நிறைவேற்​றி​யும், தமிழகத்​தில் காங்​கிரஸ் போட்​டி​யிடும் 28 இடங்​களில் 2 பெண்​களுக்கு மட்​டுமே வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

நீண்​ட​கால​மாக உழைத்​தவர்​களுக்கு முன்​னுரிமை தராத​தால்​தான் ஹசீனா சையத் வெளி​யேறி​னார். இப்​போது சமீபத்​தில் கட்​சிக்கு வந்​தவருக்​குப் பொறுப்பு தலை​வர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு பின்​னால் செல்​வப்​பெருந்​தகை​யின் சிபாரிசு இருப்​ப​தாக ஹசீனா ஆதர​வாளர்​கள் நம்​பு​கிறார்​கள். இதனால்​தான் இந்த மோதல் வெடித்​தது” என்​றனர்.

ஏப்​.15-ல் தமிழகம் வரும் ராகுல்

முன்​ன​தாக அகில இந்​திய மகளிர் காங்​கிரஸ் தலை​வர் அல்கா லம்பா செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இரண்டு நாட்​களுக்கு நான் சென்​னை​யில்​தான் இருப்​பேன். செய்​தி​யாளர் சந்​திப்​பு​கள், பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் பிரச்​சார நிகழ்ச்​சிகளில் உரை​யாற்​று​வேன்.

ராகுல்​காந்தி வரும் 15-ம் தேதி வரு​கிறார், பிரி​யங்கா காந்தி மற்​றும் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோ​ரும் பிரச்​சா​ரத்​தில் இணை​கிறார்​கள், நாங்​கள் அனை​வரும் இந்​தத் தேர்​தலில் மிகப்​பெரிய பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சியை அமைப்​போம்” என்றார்.

SCROLL FOR NEXT