தமிழகம்

திமுக குறித்த சர்ச்சை வாசகம்: 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகையில், “திமுக ஒரு தீயசக்தி, அப்பாவை காணோம்” என்று திமுக குறித்த கடுமையான விமர்சனங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை, பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினர்.

இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டிஜிட்டல் ரூட் அறிவிப்பு பலகையை தயாரித்த நிறுவனத்தின் அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் டிஜிட்டல் ரூட் அறிவிப்பு பலகையின் மதர் போர்டு சரியாக முடக்கம் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. பேருந்தின் ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் விசாரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதி பணியில் இருந்த ஓட்டுநர் சித்திரை செல்வன், நடத்துநர் செந்தாமரை கண்ணன், 10, 12-ம் தேதி பணியில் இருந்த ஓட்டுநர் பரந்தாமன், நடத்துநர் வெங்கடேஷ், 13-ம் தேதி பணியில் இருந்த நடத்துநர் மணிகண்டன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ச.ஸ்ரீதரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT