தமிழகம்

தனியார் விடுதியில் சேவை குறைபாடு: வாடிக்கையாளருக்கு ரூ.3.20 லட்சம் இழப்பீடு - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: உறு​தி​யளித்​த​படி சேவை வழங்​காத​தால், மன உளைச்​சலுக்கு ஆளான வாடிக்​கை​யாள​ருக்கு விடுதி நிறு​வனம் ரூ.3.20 லட்​சம் திருப்பி செலுத்த சென்னை தெற்கு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை திரு​வான்​மியூரைச் சேர்ந்​தவர் ஆர்​.ஸ்ரீதர். இவர் கொடைக்​கானலுக்கு சென்ற நிலை​யில், அங்​குள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில் தங்​கி​யிருந்​த​போது, அந்​நிறு​வனத்​தின் பிர​தி​நிதி கூறிய கவர்ச்​சிகர​மான வாக்​குறு​தி​களை நம்பி ரூ.3.30 லட்​சம் செலுத்தி 10 ஆண்டு கால ‘ஸ்​டெர்​லிங் வான்​டேஜ்’ உறுப்​பினர் திட்​டத்​தில் சேர்ந்​தார்.

ஆண்​டு​தோறும் பாயிண்​டு​கள், இலவச வரவேற்பு, தங்​கும் நாட்​கள் மற்​றும் எந்த பரு​வத்​தி​லும் முன்​னுரிமை முன்​ப​திவு உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் கிடைக்​கும் என உறு​தி​யளிக்​கப்​பட்​டிருந்​தது.

பல்வேறு நிபந்தனைகள்

ஆனால், ஸ்ரீதர் கேரள மாநிலம் வயநாட்​டிலுள்ள விடுதியில் தனது குடும்​பத்​தினருடன் தங்​கு​வதற்கு முன்​ப​திவு செய்ய முயன்​ற​போது, பல நிபந்​தனை​களை கூறி நிர்​வாகம் முன்​ப​திவை நிராகரித்​தது.

அதே​நேரம், தனி​யார் முன்​ப​திவு செயலிகளில் அதே விடு​தி​யில் அறை​கள் காலி​யாக இருந்​தது தெரிய​வந்​தது. மேலும், பரு​வ​கால கட்​டுப்​பாடு​கள் அடங்​கிய பட்​டியலை உறுப்​பினர் சேர்ந்த ஓராண்டு கழித்தே அந்​நிறு​வனம் பகிர்ந்​ததும் தெரிய​வந்​தது. இதனால் மன உளைச்​சலுக்கு ஆளான ஸ்ரீதர், சென்னை தெற்கு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இந்த வழக்கு ஆணை​யத் தலை​வர் பி.ஜிஜா மற்​றும் உறுப்​பினர்​கள் வி.​ராமமூர்த்தி, ஜே.ர​வீந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது “உறுப்​பினர் சேர்க்​கை​யின் போது உண்​மை​களை மறைத்​து, பின்​னர் கட்​டுப்​பாடு​களை விதித்​தது சேவை குறை​பாடு மற்​றும் முறையற்ற வணிக நடவடிக்​கையாகும்.

எனவே, பாதிக்​கப்​பட்ட ஸ்ரீதருக்கு உறுப்​பினர் கட்​ட​ணத்​தில் ரூ.3 லட்​சம், சேவை குறை​பாட்​டுக்கு இழப்​பீ​டாக ரூ.10 ஆயிரம் மற்​றும் வழக்கு செல​வுக்​காக ரூ.10 ஆயிரம் என மொத்​தம் ரூ.3.20 லட்​சத்தை 8 வார காலத்​துக்​குள் எதிர்​மனு​தா​ரர்​கள் வழங்​க வேண்​டும்​” என ஆணை​யம்​ உத்​தர​விட்டது.

SCROLL FOR NEXT