தமிழகம்

பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்: கே.சி.வீரமணி உள்பட 2 எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்தில் ராணிப்​பேட்டை மற்​றும் திருப்​பத்​தூர் மாவட்ட நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் தனித்​தனி​யாக நேற்று நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் ராணிப்​பேட்டை மேற்கு மாவட்ட முன்​னாள் செய​லா​ள​ரும், ஆற்​காடு தொகுதி எம்​எல்​ஏவு.​மான எஸ்​.எம்.சுகு​மார் மற்​றும் திருப்​பத்​தூர் மாவட்ட முன்​னாள் செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரும் ஜோலார்​பேட்டை தொகுதி எம்​எல்​ஏ.வு​மான கே.சி. வீரமணி ஆகியோர் பங்கேற்கவில்​லை.

முன்​ன​தாக, தலை​மைக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்​கிய​தால் சுகு​மாரிடம் இருந்த ராணிப்​பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்​கப்​பட்​டு, சுமை​தாங்கி ஏழு​மலைக்கு வழங்​கப்​பட்​டது.

இதே​போல் கே.சி.வீரமணி​யிட​மிருந்​தும் திருப்​பத்​தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்​கப்​பட்​டு, டாக்​டர் பசுப​தி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இதனிடையே, இவர்​களைச் சமா​தானப்​படுத்​தும் நோக்​கில் கட்​சி​யின் கொள்கை பரப்​பு துணைச் செய​லா​ள​ராக சுகு​மாரும், அமைப்​புச் செய​லா​ள​ராக வீரமணி​யும் நியமிக்​கப்​பட்​டனர்.

ஆனால், அவர்​கள் அந்​தப் பொறுப்​பு​களை ஏற்க மறுத்​து​விட்​ட​தாகக் கூறப்​படும் நிலை​யிலேயே, இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தைப் புறக்​கணித்​துள்​ளனர். எனினும், கே.சி.வீரமணி தற்​போது அமெரிக்​கா​வில் இருப்​ப​தால் கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்லை என்​றும் கூறப்படுகிறது.

அதே​போல், தவெக​வில் இணைந்த ராணிப்​பேட்டை கிழக்கு மாவட்ட முன்​னாள் செய​லா​ளர் ரவிக்கு பதிலாக லோக​நாதன் நியமிக்​கப்​பட்​டார். இவர்உள்​ளிட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் இந்த ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இதற்​கிடையே ஆலோ​சனை கூட்​டத்​தில், திருப்பத்​தூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த நிர்வாகி​கள் சிலர் திடீரென பழனிசாமியுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​ட​தால் சலசலப்பு ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அதாவது, ‘கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஒன்​றியச் செய​லா​ளர்​களைச் சுதந்​திர​மாகப் பணி​யாற்ற விடாததே அதி​முக​ தோல்விக்​கு காரணம்.

எனவே, நிர்​வாக வசதிக்​காகத் திருப்​பத்​தூர் மாவட்​டத்தை இரண்​டாகப் பிரிக்க வேண்​டும்’ என அவர்​கள் வலி​யுறுத்​தி​ய​தாகத் தெரி​கிறது. அப்போது பழனிசாமி ‘உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்’ எனக்கூறி அவர்களை சமா​தானம் செய்​த​தாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT