தமிழகம்

மெட்ரோ ரயில் முதல்கட்ட தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க ஆலோசகர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல் ​கட்​டம், முதல்​கட்ட நீட்​டிப்பு வழித் தடங்​களில், தலா 6 பெட்​டிகளைக் கொண்ட 28 மெட்ரோ ரயில்​களை கொள்​முதல் செய்ய, ஆலோ​சகர் விரை​வில் நியமிக்​கப்பட உள்​ளனர்.

சென்​னை​யில் மெட்ரோ ரயில் முதல்​கட்​டம், முதல்​கட்ட நீட்​டிப்​புக்கு பிறகு, சென்னை விமான நிலை​யம் முதல் விம்கோ நகர் வரை​யும், பரங்​கிமலை - சென்னை சென்ட்​ரல் வரை​யும் மொத்​தம் 54 கி.மீ. தொலை​வுக்கு தலா 4 பெட்​டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. மெட்ரோ ரயில்​களில் தினசரி 3.20 லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர்.

மெட்ரோ ரயில்​களின் சேவையை பொருத்​தவரை தற்​போது, வண்​ணாரப்​பேட்டை - ஆலந்​தூர் இடையே 3 நிமிடங்​களுக்கு ஒரு ரயிலும், விம்கோ நகர் - சென்னை விமான நிலை​யம் இடையே 6 நிமிடங்​களுக்கு ஒரு ரயிலும், சென்னை சென்ட்​ரல் - சென்னை விமான நிலை​யம் மற்​றும் சென்னை சென்ட்​ரல் - பரங்​கிமலை இடையே 12 நிமிடங்​களுக்கு ஒரு ரயிலும் இயக்​கப்​படு​கின்​றன.

எனவே, ரயில் களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்க 6 பெட்​டிகள் கொண்ட 28 ரயில்​களை வாங்​க​வும், கூடு​தல் ரயில்​களைக் கையாளும் வகை​யில் முதல் கட்ட நிலை​யங்​களின் கட்​டமைப்பை மாற்​றியமைக்​க​வும், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​கான திட்ட மேலாண்மை ஆலோ​சகர் விரை​வில் தேர்வு செய்​யப்பட உள்​ளனர். இதுகுறித்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “ரயில்​களை வாங்​கு ​வதற்​கான ஏல அறி​விப்பை நாங்​கள் ஏற்​க​னவே வெளி​யிட்​டுள்​ளோம்.

அடுத்த மாதம் ஏலங்​கள் திறக்​கப்​படும். ரயில்​கள் வந்து சேர 2 ஆண்​டு​கள் ஆகும் என்​ப​தால், இந்த நடவடிக்கை முதலில் மேற்​கொள்​ளப்​பட்​டது. ரயில் கொள்​முதல் மற்​றும் விநி​யோக செயல்​முறையை எளி​தாக்​க​வும், 6 பெட்டி ரயில்​களைக் கையாளும் வகை​யில் நிலை​யங்​களை மேம்​படுத்​த​வும், முதல் மற்​றும் 2-ம் கட்​டத் திட்​டங்​களைப் போலவே இதற்​கும் ஓர் ஆலோ​சகர் தேவைப்​படு​கிறார்.

தேர்ந்​தெடுக்​கப்​படும் ஆலோ​சகருக்​கான ஒப்​பந்​தம் விரை​வில் வழங்​கப்​படும். நிலை​யங்​களை மாற்​றியமைக்​கும் பணி​கள் பின்​னர் மேற்​கொள்​ளப்​படும்” என்​றார். குறைந்​த​பட்ச ஏலத்​தொகையை முன்​மொழிந்த ‘ஏகாம் இந்​தி​யா’ மற்​றும் ‘நிப்​பான்கோயி’ ஆகிய கூட்டு நிறு​வனம், இதன் திட்ட மேலாண்மை ஆலோ​சக​ராகச் செயல்பட வாய்ப்​புள்​ள​தாக மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT