சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மத்திய அரசினுடைய, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வருகிறார்.
இதைக் கண்டிக்கும் வகையிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகக் கண்டனப் போராட்டங்கள் நடைபெறும்.
டெல்லியில் செப்டம்பர் 29 அன்று நடைபெறவிருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு, இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்டத் தேசிய அளவிலான போராட்டங்கள் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.