மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதியின் தொகுதியில் காங்கிரஸுக்கு வாக்கு கேட்டு ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போஸ்டர். படம் எஸ்​.கிருஷ்ணமூர்​த்​தி.

 
தமிழகம்

‘கை சின்னத்தில் வாக்களியுங்கள்’ - மதுரையில் திமுகவினரை சீண்டிய திடீர் போஸ்டர்

செய்திப்பிரிவு

“காங்​கிரஸ் கட்​சி​யில் பூத் கமிட்​டிக் ​குக்​கூட ஆட்​கள் இல்​லை” என அண்​மை​யில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செய​லா​ளர் தளபதி எம்​எல்ஏ பொதுக்​கூட்​டத்​தில் பேசி​யிருந்​தார். தனது பேச்​சில் காங்​கிரஸ் எம்​பி-க்​களான மாணிக்​கம் தாகூர், ஜோதி​மணி ஆகி​யோரை​யும் சாடி இருந்​தார் தளப​தி.

இதற்கு உடனடி​யாக எதிர்​வினை​யாற்​றிய மாணிக்​கம் தாகூர், ‘தன்​மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட இந்​தத் தேர்​தலில் (தளப​தி​யின்) மதுரை வடக்​குத் தொகு​தி​யில் காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என்று காங்​கிரஸ் தலை​வர் கார்​கே​யிடம் கோரிக்கை வைப்​பேன்’ என்​றார். இந்​தப் பிரச்​சினை மேலும் வார்த்​தைப் போராகி வளர்​வதை விரும்​பாத திமுக தலை​மை, தளப​தியை அழைத்து கண்​டித்​ததுடன், ‘கூட்​டணி தொடர்​பாக திமுக-​வினர் யாரும் பொது​வெளி​யில் பேசவேண்​டாம். அதை தலை​வர் பார்த்​துக் கொள்​வார்’ என்று அறிக்​கை​யும் வெளி​யிட்​டது.

          

இந்​நிலை​யில் நேற்​று, ‘மதுரை வடக்​குத் தொகு​தி​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் வேட்​பாள​ருக்கு கை சின்​னத்​தில் வாக்​களி​யுங்​கள்’ என மதுரை வடக்கு தொகுதி காங்​கிரஸ் பெயரில் திடீரென போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன. இதுகுறித்து நம்​மிடம் பேசிய மதுரை மாநகர் மாவட்ட காங்​கிரஸ் தலை​வர் நல்​லமணி, “தி​முக-வுக்​கும் காங்​கிரஸுக்​கும் இடை​யில் இருக்​கும் நல்​லுறவை கெடுக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் யாரோ மர்ம நபர்​கள் இது போன்று போஸ்​டர்​களை ஒட்​டி​யுள்​ளனர்.

இது தொடர்​பாக கட்சி மேலிடத்​திற்கு தகவல் தெரி​வித்​துள்​ளோம். இச்​செயலில் ஈடு​பட்​ட​வர்​கள் யார் என்​பது குறித்து விசா​ரித்​துக் கொண்​டிருக் கிறோம். அது எங்​கள் கட்​சி​யின​ராக இருந்​தால், அவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுப்​போம். மாற்​றுக் கட்​சி​யின​ராக இருந்​தால் அவர்​கள் குறித்து காவல்​துறை​யில் புகார் அளிப்​போம்” என்​றார்.

தேர்​தல் கூட்​டணி தொடர்​பாக டெல்​லி​யில் திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி ராகுல் காந்​தியை சந்​தித்​துப் பேசி இருக்​கும் நிலை​யில், திமுக-வை சீண்​டிப் பார்க்​கும் வித​மாக காங்​கிரஸ் பெய​ரால் மதுரைக்​குள் ஒட்​டப்​பட்​டுள்ள போஸ்​டர்​கள் இரண்டு கட்​சிகளுக்​குள்​ளும் பரபரப்பை உண்​டாக்கி இருக்​கிறது.

SCROLL FOR NEXT