தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. படம்: எல்.சீனிவாசன்
சென்னை: திமுக அழைத்ததும் கூட்டணி பேச்சுவாத்தையை தொடங்குவோம் என்று தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நவேதித் ஆல்வா ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தேர்தலை எதிர்கொள்வது, மாநாடு நடத்துவது, நெசவாளர், மீனவர், மகளிர் மாநாடுகளை நடத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக முடிவெடுத்தாகிவிட்டது. அதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
திமுகவுடன் இப்போது கூட்டணி தொடர்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேட்டதற்கு பதிலளித்த அவர், “ஏற்கெனவே திமுக தலைவர்
ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்கள் அழைக்கும் போது பேச்சுவார்த்தையை தொடங்குவோம்” என்றார்.