ப.சிதம்பரம் (கோப்புப் படம்) 
தமிழகம்

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங். அமைத்த 5 பேர் குழு: ப.சிதம்பரம் வரவேற்பு!

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்காக திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைமை ஐந்து உறுப்பினர் குழுவை நியமித்திருப்பதை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.

'இண்டியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையும் என தகவல்கள் வெளியாகின. மேலும், இக்கூட்டணி தொடர்பாக விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த குழுவில் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஹால்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT