மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமர வேலுக்கு ஆதரவாக வேடந்தாங்கல், மொரப்பாக்கம் ஊராட்சிகளில் காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

 
தமிழகம்

மதுராந்தகம் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வேடந்தாங்கல் பகுதிகளில் காங்கிரஸ் வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில் மதச்​சார்​பற்ற சமூகநீதி வெற்​றிக் கூட்​டணி சார்​பில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர் மரகதம் குமர​வேலுக்கு ஆதர​வாக காங்​கிரஸ் கட்​சி​யினர் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர்.

வேடந்​தாங்​கல் மற்​றும் மொரப்​பாக்​கம் ஊராட்​சிகளில் நடை​பெற்ற பிரச்​சா​ரத்​தில் 100 நாள் வேலைத்​திட்​டப் பணி​யாளர்​கள் மற்​றும் பொது​மக்​களை சந்​தித்து ஆதரவு திரட்​டினர்.

இதில் காஞ்​சிபுரம் முன்​னாள் மாவட்டத் தலை​வர் வி.ஆர்​.சிவ​ராமன், செங்​கல்​பட்டு வடக்கு மாவட்ட தலை​வர் ஆர்​.எஸ்​.செந்​தில்​கு​மார், காங்​கிரஸ் மற்​றும் தவெக நிர்​வாகி​கள் பங்​கேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். இதே​போல் தஞ்​சாவூர் தவெக சட்​டப்​பேரவை உறுப்​பினர் விஜய்​சர​வணனும் பங்​கேற்று வேட்​பாள​ருக்கு ஆதர​வாக வாக்​குசேகரித்​தார்​.

SCROLL FOR NEXT