தமிழகம்

காகிதமில்லா பத்திரப் பதிவு முறையில் குழப்பம் - ஆவணங்கள் பதிவேற்றத்திலும் குளறுபடி

பிழைகளை கண்டறிவதில் சிரமம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை: காகிதமில்லா பத்​திரப்​ப​திவு முறை​யில் ஆவணங்​கள் சரியாக பதிவேற்​றம் ஆவதில்லை என்​றும், பிழைகளைக் கண்​டறிவதில் சிரமம் இருப்​ப​தாகவும் புகார் எழுந்​துள்​ளது.

தமிழகத்​தில் ஸ்​டார் 3.0 காகிதமில்லா பத்​திரப்​ப​திவு திட்​டம் கடந்த நவ.2-ம் தேதி​யி​லிருந்து அமலுக்கு வந்​தது. இதில், செட்​டில்​மென்ட் பத்​திரம், விடுதலைப் பத்​திரம், பாகப் பிரி​வினை பத்​திரம், செட்​டில்​மென்ட் ரத்து பத்​திரம் ஆகிய 4 வகை​யான குடும்ப ஏற்​பாடு தொடர்​பான ஆவணங்​களை பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், இந்த முறை​யில் பல்​வேறு குழப்​பங்​கள் உள்​ள​தாக பத்திரப் பதிவு செய்​வோர் புகார் தெரி​வித்​துள்​ளனர். இடைத்​தரகர்​கள் இல்​லாமல் வீட்​டில் இருந்​த​படியே பத்​திப்​ப​திவு செய்​ய​லாம் என்று பதிவுத்​துறை தெரி​வித்​தது. ஆனால், இது​தொடர்​பான விழிப்​புணர்வு மக்​களிடம் ஏற்​படாததால் இன்​னும் பத்​திர எழுத்​தர்​கள், கணினி இயக்​குநர்​களையே மக்​கள் நாடு​கின்​றனர்.

அங்கு கடந்த காலங்​களில் பத்​திரப்​ப​திவு விவரங்​களை ‘ஆப் லைனில்’ பதிவு செய்​து​விட்டு, அதை டவுன் லோடு செய்​வர். பின்​னர், அதை பிரின்ட் எடுத்து விண்​ணப்​ப​தா​ரரிடம் கொடுப்​பர். அதை விண்​ணப்​ப​தா​ரர் சரிபார்த்த பின்​னரே ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்​வர்.

இத​னால், பெரும்​பாலும் பிழைகளு​டன் பத்​திரப் பதிவு செய்​வது தவிர்க்​கப்​பட்​டது. ஆனால், புதிய நடைமுறை​யில் நேரடி​யாக ஆன்​லைனில் பத்​திரப் பதிவு விவரங்​களை பூர்த்தி செய்ய வேண்​டும். ஆனால், அவற்றை டவுன்​லோடு செய்து பிரின்ட் எடுக்க முடி​யாது.

இத​னால் கணி​னி​யிலேயே விண்​ணப்​ப​தா​ரர் பிழைகளை சரிபார்க்க வேண்​டிய நிலை உள்​ளது. அதில் விண்​ணப்​ப​தா​ரர்​களால் சரியாக சரிபார்க்க முடி​யாத நிலை உள்​ளது. தவறான விவரங்​களு​டன் விண்​ணப்​பித்​து​விட்​டால், மீண்​டும் செலவு செய்து சீர்த்​திருத்த பத்​திரம் பதிய வேண்​டும்.

அதேபோல், சிலசமயங்​களில் மூல ஆவணங்​கள், துணை ஆவணங்​கள் சரியாக பதிவேற்​றம் ஆவதில்லை. இத​னால், அந்த பத்​திரப்​ப​திவை சார் பதிவாளர்​கள் நிராகரிக்​கின்​றனர். இதையடுத்து, மீண்​டும் பத்​திரப்​ப​திவுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டிய நிலை உள்​ளது. இதுபோன்ற குழப்​பங்​களை சரிசெய்ய வேண்டு​மென கோரிக்கை எழுந்​துள்​ளது.

இது​குறித்து தேவகோட்​டையைச் சேர்ந்த பத்​திர எழுத்​தர்​கள் சிலர் கூறிய​தாவது: புதிய நடைமுறை​யில் கணினி மூலமே பிழைகளை சரிபார்க்க வேண்​டியுள்​ளது. இத​னால் பிழைகளை விண்​ணப்​ப​தா​ரர்​கள் சரியாக கண்​டறிவதில் சிரமம் உள்​ளது.

சில சமயங்​களில் பிழைகளோடு பத்​திரப்​ப​திவு செய்​யும் நிலை உள்​ளது. இத​னால், பதிவு விவரங்​களை பதிவேற்​றம் செய்​ததும், அதை டவுன் லோடு செய்​யும் வசதியை ஏற்​படுத்தி கொடுத்​தால், சரிபார்க்க எளிதாக இருக்​கும். அதேபோல் மூல ஆவணங்​கள், துணை ஆவணங்​களை நாங்​கள் பதிவேற்​றம் செய்து விடு​கிறோம்.

ஆனால், சார்-பதிவாளர் அலு​வல​கங்​களில் சில ஆவணங்​கள் பதிவேற்​றம் ஆகாதது போல் காட்​டு​கிறது. இத​னால், அந்த பத்​திரப் பதிவை நிராகரிக்​கின்​றனர். மேலும், தேவகோட்டை போன்ற சில இடங்​களில் சார்-பதிவாளர் அலு​வல​கங்​களில் ஆட்​கள் பற்​றாக்​குறை​யால், ஆவணங்​களை சரி பார்த்து ஒப்​புதல் அளிக்​கவும் பல நாட்​கள் ஆகின்​றன.

இத​னால் பதிவுத்​துறை கூறியபடி 60 நிமிடங்​களி​லேயே பத்​திரங்​களை பதி​விறக்​கம் செய்ய முடி​யாத நிலை உள்​ளது. இதுபோன்ற குழப்​பங்​களை சரிசெய்ய வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT