பதிவுத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். உடன் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

 
தமிழகம்

ரூ.156 கோடியில் அலுவலகங்கள், குடியிருப்புகள்: முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை: ப​திவுத்​துறை, ஊரகவளர்ச்​சித்​துறை, நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை சார்​பில் ரூ.155.81 கோடி​யில் சார்​ப​திவு அலு​வல​கங்​கள், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அலு​வலக கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டாலின் நேற்று திறந்​து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கோயம்​புத்​தூர்– கிணத்​துக்​கட​வு, சூலூர், தூத்​துக்​குடி – ஏரல், விழுப்​புரம் -திரு​வெண்​ணைநல்​லூர், திரு​வள்​ளூர் – பொன்​னேரி, திருப்​பத்​தூர் - 2 எண் இணை சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் மற்​றும் சிவகங்கை – திருப்​புவனம் என ரூ.14.92 கோடி​யில் பதிவுத்​துறைக்கு கட்​டப்​பட்​டுள்ள 7 புதிய சார்​ப​தி​வாளர் அலு​வல​கக் கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டாலின் காணொலி​யில் திறந்​தார்.

          

இதுத​விர, கோயம்​புத்​தூர் (வடக்​கு) பதிவு மாவட்​டத்​தில் புதி​ய​தாக உரு​வாக்​கப்​பட்ட சர்க்​கார்​சாமக்​குளம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கம், 22 கிராமங்களை உள்​ளடக்கி புதிதாக உருவாக்கப்பட்ட பாப்​பாரப்​பட்டி சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் நேற்று திறந்​தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை சார்​பில் ரூ.78 .41 கோடி​யில் ராம​நாத​புரம்-வல்​லி​மாடன்​வலசை​யில் கட்​டப்​பட்​டுள்ள சமத்​து​வபுரம், நாமக்கல், வையப்​பமலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள சுப்​ரமணியசாமி கோ​யில் மலைச்​சாலை மற்​றும் ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை அலு​வல​கக் கட்டிடங்​கள், பொது சுகா​தார கட்டிடங்​கள், சமு​தாயக் கூடங்​கள், பள்​ளிக் கட்​டிடங்​களை​யும் திறந்​தார்.

இதுத​விர, கோயம்​புத்​தூர், அவி​னாசி பிர​தான சாலை​யில் உள்ள வஉசி பூங்​கா​வில் ரூ.50 லட்​சம் செல​வில் நிறு​வப்​பட்​ட ஜி.டி. நாயுடு சிலையையும் முதல்​வர் திறந்​தார்.

மேலும், நகர்ப்புற வாழ்​விட மேம்​பாட்டு வாரி​யம் சார்​பில் மதுரை​யில் சுப்​பிரமணி​யபுரம் திட்​டப் பகு​தி​யில் ரூ.62.68 கோடி​யில் கட்​டப்​பட்ட 396 புதிய அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை திறந்து வைத்​தார். கடந்த 5 ஆண்​டு​களில் 210 திட்​டப் பகு​தி​களில் 74,522 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்​சர்​கள் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்​பரசன், மு.பெ.சாமி​நாதன், பி.மூர்த்​தி, தலை​மைச்​ செயலர் நா.​முரு​கானந்​தம் உள்​ளிட்டோர் பங்​கேற்றனர்.

SCROLL FOR NEXT