தமிழகம்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பாக பெட்ரோலிய டீலர்கள் மீதான நடவடிக்கைக்கு கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை​கள் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் பெட்​ரோலி​யம் டீலர்கள் மீது மேற்​கொள்​ளப்​படும் தேவையற்ற நடவடிக்​கைகளுக்கு தமிழக பெட்​ரோலிய டீலர்​கள் சங்​கம் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இது குறித்​து, அச்​சங்​கத் தலை​வர் கே.பி.​முரளி வெளி​யிட்ட அறிக்​கை: பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​களின் கீழ் இயங்​கும் பெட்​ரோல் பங்க் உரிமை​யாளர்​கள் தினசரி ஆயிரக்​கணக்​கான வாடிக்​கை​யாளர்​களுக்கு சேவை வழங்கி வரு​கின்​றனர்.

பண மதிப்​பிழப்பு நடவடிக்​கைக்​குப் பிறகு, ரொக்​கமில்லா பரிவர்த்​தனை​களை ஊக்​குவிக்​கும் மத்​திய அரசு மற்​றும் எண்​ணெய் நிறு​வனங்​களின் கொள்​கைளுக்கு ஆதர​வாக டீலர்​கள் கூகுள் பே, போன்​பே, பேடிஎம், யுபிஐ மற்​றும் கிரெடிட்​-டெபிட் கார்​டு​கள் போன்ற டிஜிட்​டல் வழி​முறை​களை நடை​முறைப்​படுத்​தினர்.

இதன்​விளை​வாக, பல விற்​பனை நிலை​யங்​களில் பெறப்​படும் மொத்​தப் பரிவர்த்​தனை​களில் 50 சதவீதத்​துக்​கும் அதி​க​மானவை டிஜிட்​டல் முறை​யிலேயே நடை​பெறுகின்​றன. தினசரி 200 முதல் 500 வரையி​லான டிஜிட்டல் பரிவர்த்​தனை​கள் பதி​வாகின்​றன.

எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்​கை​யாளர்​களின் பின்​னணி, அடை​யாளச் சான்று அல்​லது அவர்​கள் பயன்​படுத்​தும் பணத்​தின் ஆதா​ரத்தை ஆரா​யும் நடை​முறைச் சாத்​தி​யமோ அல்​லது வசதியோ டீலர்​களுக்கு கிடை​யாது.

அப்​பணம் வங்​கி​யின் பணப்​பரிவர்த்​தனை அமைப்​பில் எவ்​வாறு நகர்​கிறது என்​ப​தன் மீது டீலர்​களுக்கு எந்​தக் கட்​டுப்​பாடும் இல்​லை. அரசின் கொள்​களைக்கு முழு​மை​யாக உட்​பட்​டுச் செயல்​பட்ட போதி​லும், டீலர்​கள் கடுமை​யான வணிக முடக்​கத்​தை​யும் தனிப்​பட்ட முறை​யில் துயரங்​களை​யும் சந்​தித்து வரு​கின்​றனர்.

பணம் முடக்​கம்

சைபர் கிரைம் அதி​காரி​களின் அறி​வுறுத்​தல்​களைச் சுட்​டிக்​காட்​டி, டீலர்​களின் கணக்​கு​களில் உள்ள தொகை​யின் மீது லியன் குறி​யீடு வைப்​பது அல்​லது வணி​கத்தை நடத்​தும் முழு வங்​கிக் கணக்​கை​யும் முடக்​கு​வது போன்ற நடவடிக்​கை​களில் வங்​கி​கள் ஈடு​படு​கின்​றன.

சில நிகழ்​வு​களில், விசா​ரணை என்ற பெயரில் டீலர்​களை அவர்​களின் வீடு​களில் இருந்து அதி​காலை நேரத்​தில் காவல்​துறை​யினர் அழைத்து சென்​று, குறிப்​பிட்ட பரிவர்த்​தனை பற்​றிய எந்​தத் தகவலும் வழங்​காமல் பல மணி நேரம் காவல் நிலை​யங்​களில் வைப்​ப​தாக தகவல் தெரிவிக்​கின்​றன.

இத்​தகைய வெளிப்​படைத்தன்​மையற்ற நடவடிக்​கைகள், சட்​டம் காக்​கும் வணிக உரிமை​யாளர்​களுக்கு மிகுந்த மன உளைச்​சலை​யும் அவமானத்​தை​யும், நற்​பெயருக்கு களங்​கத்​தை​யும் ஏற்​படுத்​துகின்​றன.

டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை வசதியை வழங்​கியதற்​காகவே டீலர்​கள் தொடர்ந்து அலைக்​கழிப்​பு​களை​யும், தன்​னிச்​சை​யான கணக்கு முடக்​கத்​தை​யும், காவல் நிலை​யத்​தில் போலீ​ஸாரை சந்​திக்க நேரிட்​டால், அனைத்து டிஜிட்​டல் செலுத்​துதல் முறை​களை​யும் தற்​காலிக​மாக நிறுத்தி வைப்​பது குறித்து சங்​கம் பரிசீலிக்க வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​படும்.

எனவே, காவல்​துறை சைபர் கிரைம் அதி​காரி​கள், வங்கி நிறு​வனங்​கள் மற்​றும் மாநில அரசு ஆகியவை உடனடி​யாக தலை​யிட்டு தெளி​வாக வழி​காட்​டு​தல்​களை அமல்​படுத்த வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT