கோப்புப் படம்

 
தமிழகம்

அதிக கட்டண புகார்: 778 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை

வெற்றி மயிலோன்

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் தொடர்பாக போக்குவரத்துத் துறை மேற்கொண்ட வாகனத் தணிக்கைகளில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் உத்தரவின்படி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 15.10.2026 மாலை முதல் 17.10.2026 காலை வரை தமிழ்நாடு முழுவதும் 4233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT