சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால், சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.
பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருட்களின் மீதும் இதன் தாக்கம் இருக்கும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் போர் காரணமாக சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட எந்த எரிபொருளுக்கும் தட்டுப்பாடு, இருக்காது என பாஜகவினர் பேசி வந்த நிலையில் சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இ.கம்யூ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: போர் காரணமாக, காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டதை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.