தமிழகம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய விண்வெளி ஆராய்ச்சி நிறு​வனத்தை (இஸ்ரோ) தனி​யார்​மய​மாக்க மத்​திய பாஜக அரசு முயற்சி செய்​வ​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கண்டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி தலை​மையி​லான பாஜக அரசு, தனி​யார்​மய​மாக்​கல் கொள்​கை​யைத் தீவிர​மாக நடை​முறைப்​படுத்தி வரு​கிறது. அதன் ஒவ்​வொரு நடவடிக்​கை​யும் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் கொழுத்த லாபம் பெறு​வதற்கு ஆதார​வாகவே அமைந்​துள்​ளன.

அந்​தவகை​யில், தற்​போது இஸ்​ரோவை​யும் தனி​யார்​மய​மாக்​கும் முயற்​சி​யில் பாஜக அரசு தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கிறது. இத்​தகைய தேச விரோதப்​போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது.

மாபெரும் சாதனை​களைப் படைத்​துள்ள பொதுத்​துறை நிறு​வன​மான இஸ்​ரோ, ஆர்​யபட்​டா​வில் தொடங்கி கடந்த அரை நூற்​றாண்டு காலத்​தில் உலகம் வியக்​கத்​தக்க சாதனை​கள் புரிந்​து, நாட்​டின் அறி​வியல் தொழில்​நுட்​பத் திறனைப் பறை​சாற்றி வரு​கிறது.

பல்​வேறு வளர்ச்​சி​யடைந்த நாடு​களின், தனி​யார் நிறுவன விண்​கலங்​கள் இஸ்ரோ மூலம் ஏவப்​படு​கின்​றன. இது இந்​தி​யா​வின் அறி​வியல் தொழில்​நுட்ப சாதனை தொடர்ந்து வளர்ச்​சி​யடைந்து வரு​வதையே காட்​டு​கிறது.

இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் ‘ஸ்கை ரூட்’ என்ற தனி​யார் விண்வெளி நிறு​வனத்தை ஊக்​கப்​படுத்​தும் வகை​யில் பாஜக அரசு செயல்​படு​வது கவலை அளிக்​கிறது. அதே​போல, அணுசக்​தித் துறை, பாது​காப்​புத் துறை போன்​றவற்​றை​யும் பாஜக அரசு தனி​யார்​மய​மாக்கி வரு​கிறது.

இது அரசி​யல் அமைப்​புச் சட்​டத்​துக்​கும், நாடாளு​மன்ற உரிமை​களுக்​கும் முரணானது. நாட்​டின் பாது​காப்​புக்கு ஆபத்தை ஏற்​படுத்​தும் வகை​யில், இஸ்​ரோவை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கை​யை​யும், தனி​யார் விண்வெளி நிறு​வனங்​களை ஊக்​கப்​படுத்​து​வதை​யும் மத்​திய அரசு உடனடி​யாகக் கைவிட வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT