ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து, போரை மத்திய அரசு கண்டிக்க வலியுறுத்தியும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த அமைதி முயற்சியை இந்தியா எடுக்க வேண்டும்: கம்யூ., விசிக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடு​களு​டன் சேர்ந்து அமை​திக்​கான முயற்​சியை இந்​திய அரசு எடுக்க வேண்​டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் நடத்​தும் போரை கண்​டித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி சார்​பில் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

          

ஆர்ப்​பாட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆகியோர் கலந்​து​கொண்டு போரை உடனடி​யாக நிறுத்த வேண்​டும், யுத்​தம் வேண்​டாம் அமைதி வேண்​டும், இந்​திய அரசு தலை​யிட்டு போரை நிறுத்த வேண்​டும் என கோஷங்​களை எழுப்​பினர்.

ஆர்ப்​பாட்​டத்​துக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் பெ.சண்​முகம், மு.வீர​பாண்​டியன், திரு​மாவளவன் ஆகியோர் கூறிய​தாவது: அமெரிக்​கா​வின் யுத்த வெறி​யாலும், இஸ்​ரேலின் இனவெறி​யாலும் மத்​திய கிழக்கு பற்றி எரி​கிறது.

லட்​சக்​கணக்​கான அப்​பாவி மக்​கள், குழந்​தைகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் அலறல் சத்​தம் உலகத்​தின் மனசாட்​சியை உலுக்கி எடுக்​கிறது. போர் நிய​தி​கள், ஐநா விதி​களை மீறி மனிதகுலத்​தின் எதிரி என்​பதை அமெரிக்க ஏகா​திபத்​தி​யம் மீண்​டும் நிருபித்​துள்​ளது.

இந்த விவ​காரத்​தில் உலகின் மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா பார்​வை​யாள​ராக இருக்​கிறது. லட்​சக்​கணக்​கான இந்​தி​யர்​கள், தமிழர்​கள் வாழ்​வாதரத்​துக்​காக அங்கே சென்று பணிபுரி​கின்​றனர்.

அவர்​களை பத்​திர​மாக மீட்க வெளி​யுறவுத்​துறை நடவடிக்கை எடுக்க வேண்​டும். அணி சேரா நாடு​களின் முன்​னணி நாடு என்ற முறை​யில் இந்​திய அரசு, ரஷ்​யா, சீனா போன்ற பிரிக்ஸ் நாடு​களு​டன் இணைந்து உடனடி​யாக அமை​திக்​கான முயற்​சியை எடுக்க வேண்​டும்.

அமெரிக்க அதிப​ராக டிரம்ப் பொறுப்​பேற்ற 13 மாதங்​களில் 7 நாடு​கள் மீது குண்​டு​கள் வீசி அப்​பாவி மக்​களை கொல்வதை வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். போர் தொடர்ந்து நடை​பெற்​றால் கச்சா எண்​ணெய் விலை உயரும், அனைத்து பொருட்​களின் விலை​யும் கடுமை​யாக உயரும்.

இந்​திய அரசு உடனடி​யாக இதில் தலை​யிட்டு அமெரிக்​கா, இஸ்​ரேலுக்கு அழுத்​தம் கொடுக்க வேண்​டும். அமைச்​சர​வையை கூட்டி போர் நிறுத்​தத்தை வலி​யுறுத்தி தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்​. இந்​தி​யா​வில்​ உள்​ள ஜன​நாயக சக்​தி​கள்​ ஒன்​றிணைந்​து போர்​ நிறுத்​ததுக்​கு குரல்​ கொடுக்​க வேண்​டும்​. இவ்​​வாறு அவர்கள் கூறினர்​.

SCROLL FOR NEXT