தமிழகம்

நிலுவை வழக்குகளை விரைந்து முடித்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ​காவல் நிலை​யங்​களில் நிலு​வை​யில் இருந்த வழக்​கு​களின் விசா​ரணையை விரைந்து முடித்​து, இறுதி அறிக்​கைகளை நீதி​மன்​றங்​களில் தாக்​கல் செய்து சிறப்​பாகப் பணி​யாற்​றிய போலீஸ் அதி​காரி​களுக்கு காவல் ஆணை​யர் பாராட்டு தெரி​வித்​தார்.

சென்​னை​யில் உள்ள காவல் நிலை​யங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து விசா​ரித்​து, இறுதி அறிக்​கைகளை நீதி​மன்​றங்​களில் தாக்​கல் செய்து வழக்​கு​களை துரிதப்​படுத்த போலீஸ் அதி​காரி​களுக்கு காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டிருந்​தார்.

இதன் அடிப்​படை​யில் புழல், தலை​மைச் செயல​கக்குடி​யிருப்​பு, திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யங்​களில் பணி​யாற்​றிய காவல் குழு​வினர், நிலுவை வழக்​கு​களை விரைந்து முடித்து நீதி​மன்​றங்​களில் இறுதி அறிக்​கைகளை தாக்​கல் செய்து முத்​திரை பதித்​தனர்.

அதாவது, கடந்த மே 26 முதல் ஜூன் 30-ம் தேதி வரை, புழல் காவல் நிலை​யத்​தில் நிலு​வை​யில் இருந்த 2,120 வழக்​கு​களில் 1,023 வழக்​கு​களுக்கு இறுதி அறிக்​கைகள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

அதே​போல் தலை​மைச் செயல​கக் குடி​யிருப்பு காவல் நிலை​யத்​தில் நிலு​வை​யில் இருந்த 932 வழக்​கு​களில் 562 வழக்​கு​களும், திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் நிலு​வை​யில் இருந்த 1,164 வழக்​கு​களில் 528 வழக்​கு​களும் விரைந்து முடிக்​கப்​பட்டு சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றங்​களில் இறுதி அறிக்​கைகள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த பணி​யில் சிறப்​பாகச் செயல்​பட்ட 3 காவல் ஆய்​வாளர்​கள், 2 உதவி ஆய்​வாளர்​கள், 2 சிறப்பு உதவி ஆய்​வாளர்​கள், ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்​டர் மற்​றும் 9 காவல் பணி​யாளர்​கள் என மொத்​தம் 17 பேரை சென்னை காவல் ஆணை​யாளர் அமல்​ராஜ் நேற்று நேரில் அழைத்​து பா​ராட்​டி வெகும​தி வழங்​கி​னார்​.

SCROLL FOR NEXT