எம்​எல்ஏ குழந்​தைராணி

 
தமிழகம்

பணி ஒதுக்கீட்டுக்கு கமிஷன்: சிவகங்கை தவெக பெண் எம்எல்ஏ மீது ஒப்பந்ததாரர்கள் புகார்

செய்திப்பிரிவு

சிவகங்கை: விபிஜி ராம்ஜி திட்​டத்​தில் ரூ.11 கோடிக்​கான பணிகள் ஒதுக்​கீட்​டில் சிவகங்கை தவெக பெண் எம்​எல்ஏ கமிஷன் கேட்​ப​தாக ஒப்​பந்​ததா​ரர்​கள் புகார் தெரி​வித்​தனர்.

விபிஜி ராம்ஜி திட்​டத்​தில் அங்​கன்​வாடி மையம், ஊராட்சி அலு​வல​கம், பேவர் பிளாக் சாலை அமைத்​தல் போன்ற பொருட்​கள் சார்ந்த பணிகள் அந்​தந்த ஊராட்​சிச் செயலர்​கள் பெயரில் ஒதுக்​கப்​பட்​டு ஒப்​பந்​ததா​ரர்​கள் மூலம் மேற்​கொள்​ளப்​படும். நடப்​பாண்​டில் இத்​திட்​டத்​தில் சிவகங்கை ஒன்​றியத்​துக்கு ரூ.11 கோடி ஒதுக்​கப்​பட்​டது.

இப்​பணிகள் அனைத்​தையும் தவெக​வினருக்கே எம்​எல்ஏ குழந்​தைராணி ஒதுக்​கிய​தாகவும், மேலும் தங்​களிடம் பணி ஒதுக்​கீட்​டுக்கு கமிஷன் கேட்​ப​தாகவும் ஒப்​பந்​ததா​ரர்​கள் புகார் தெரி​வித்​தனர். தொடர்ந்து சிவகங்கை ஊராட்சி ஒன்​றியப் பதிவு​பெற்ற ஒப்​பந்​தகாரர்​கள் நலச்​சங்​கத்​தினர், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்​குநர் ஆயுஷ்​வெங்​கட் வட்​ஸிடம் மனு கொடுத்​தனர்.

இது குறித்து ஒப்​பந்​ததா​ரர்​கள் கூறிய​தாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்​றியத்​தில் 120 ஒப்​பந்​ததா​ரர்​கள் பதிவு செய்​துள்​ளோம். எங்​களுக்​குப் பணிகளைப் பிரித்து கொடுக்​காமல் தவெக​வினருக்கு நேரடி​யாகப் பணிகளை ஒதுக்​கி​விட்​டனர். மேலும், பணிகளை எங்​களுக்கு ஒதுக்​குமாறு கேட்​ட​தால் எம்​எல்ஏ குழந்​தைராணி 10 சதவீதம் கமிஷன் கேட்​கிறார்.

மேலும் 2024-25-ம் ஆண்​டில் மேற்​கொள்​ளப்​பட்ட தேசிய வேலை உறுதித் திட்​டப் பணிகளுக்கு இதுவரை பணத்தை விடுவிக்​க​வில்லை. இத​னால், மிகுந்த சிரமத்​தில் உள்​ளோம். இவ்​வாறு அவர்​கள் கூறினார். அப்​போது அங்கு வந்த ஒப்​பந்​ததா​ரர்​கள் சிலர், பணி ஒதுக்​கீட்​டில் எந்த விதி​மீறலும் இல்லை. எம்​எல்ஏ தலை​யிட​வும் இல்லை, என்​றனர்.

எம்​எல்ஏ குழந்​தைராணி​யிடம் கேட்​டபோது, ‘விபிஜி ராம்ஜி திட்​டப் பணிகளை ஒதுக்​கீடு செய்​ததில் நான் தலை​யிட​வில்லை. நான் கமிஷன் கேட்​ட​தாகக் கூறு​வது முற்​றி​லும் பொய். என் மீது தவறான குற்​றச்​சாட்​டைக் கூறுகின்​றனர்’ என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT