கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானி நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர். (உள்படம்) நமன்ஸ் ஷ்யால்

 
தமிழகம்

துபாய் சாகச‌ நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவையில் ஆட்சியர் அஞ்சலி: முதல்வர் இரங்கல்

செய்திப்பிரிவு

கோவை / புதுடெல்லி: து​பாய் சாகச‌ நிகழ்​வில் உயி​ரிழந்த, இந்​திய விமானப்​படையைச் சேர்ந்த விமானி விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு சூலூர் விமானப்​படை தளத்​தில் கோவை மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் அதி​காரி​கள் அஞ்​சலி செலுத்​தினர். தொடர்ந்​து, இறு​திச் சடங்​குக்​காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் இமாச்​சலப் பிரதேசத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இமாச்​சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்​திய விமானப்​படை விமானி விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் கோவை சூலூரில் உள்ள விமான சாகசப் படைப் பிரி​வில் பணி​யாற்றி வந்​தார். இவரது மனை​வி​யும் விமானப்​படை அதி​காரி​யாக சூலூர் விமானப்​படை தளத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். அவரது ஆறு வயது மகள் மற்​றும் பெற்​றோர் சூலூரில் வசித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், துபா​யில் நடை​பெற்ற விமான கண்​காட்​சி​யில் இந்​திய விமானப்​படை​யின் தேஜஸ் போர் விமானம் பங்​கேற்​றது. இந்​தக் கண்​காட்சி கடந்த 21-ம் தேதி நிறைவடைந்​தது. அன்று நடை​பெற்ற விமான சாகச நிகழ்ச்​சி​யில், தேஜஸ் போர் விமானத்தை விங் கமாண்​டர் நமன்ஸ் ஷ்யால் இயக்​கி​னார்.

வானில் தலைகீழாகப் பறந்து சாகசம் நிகழ்த்​திய தேஜஸ் போர் விமானம் திடீரென தரை​யில் மோதி வெடித்​துச் சிதறியது. இதில் பைலட் நமன்ஸ் ஷ்யால் உயி​ரிழந்​தார். இந்த சம்​பவம் பார்​வை​யாளர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது. நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு ஐக்​கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் சார்​பில் நேற்று முன்​தினம் மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

இமாச்​சலப் பிரதேசத்​துக்​கு... இதையடுத்​து, நமன்ஸ் ஷ்யாலின் உடல் விமானப் படை​யின் சி130ஜே விமானம் மூலம் சூலூர் விமானப்​படை தளத்​துக்கு நேற்று கொண்​டு​வரப்​பட்​டது. அங்கு கோவை மாவட்ட ஆட்​சி​யர் பவன்​கு​மார் கிரியப்​பனவர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கார்த்​தி​கேயன் மற்​றும் விமானப்​படை அதி​காரி​கள், அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் மலர்​வளை​யம் வைத்து இறுதி அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர் இறு​திச் சடங்​குக்​காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் சொந்த ஊரான இமாச்​சலப் பிரதேசத்​தின் கங்​ரா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டது.

இதற்​கிடை​யில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘விங் கமாண்​டர்’ நமன்ஸ் ஷ்யாலுக்கு வீர வணக்​கம். அவரது உடல் கோவைக்​குக் கொண்​டு​வரப்​பட்ட காட்​சிகளைக் கண்டு கலங்​கினேன். கோவை சூலூர் விமானப்​படை தளத்​தில் பணிபுரிந்த அவருக்​குத் தமிழகம் தனது அஞ்​சலியைச் செலுத்​துகிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு முதல்​வர் ஸ்டாலின் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT