கோவை மாநகராட்சி அலுவலகம்.

 
தமிழகம்

பல்வேறு வரி முறைகேடுகளால் கோவை மாநகராட்சிக்கு ரூ.2,300 கோடி வருவாய் இழப்பு

தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநக​ராட்​சி​யில் வரி வசூலில் முறைகேடு காரண​மாக ரூ.2,300 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது சிறப்பு தணிக்கை அறிக்​கை​யின் மூலம் தெரிய​வந்​துள்​ளது.

கோவை சமூக ஆர்​வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட செயற்​பாட்​டாள​ரு​மான எஸ்.பி.தியாக​ராஜன் கோவை மாநக​ராட்​சி​யின் வரி வசூல் தொடர்​பாக தகவல் அறியும் உரிமைச் சட்​டம் மூலம் தகவல் கேட்​டிருந்​தார். அதில் தெரி​விக்​கப்​பட்​டிருந்த தகவல்​கள் குறித்து செய்​தி​யாளர்​களிடம் எஸ்.பி.தியாக​ராஜன் கூறிய​தாவது:

தணிக்​கைத்​துறை இயக்​குநரின் உத்​தரவுப்​படி, அண்​மையில் கோவை தணிக்​கைத்​துறை அதி​காரி​கள், மாநக​ராட்​சி​யில் 2021-2026 இடையேயான கால​கட்​டத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட வரவு - செலவு குறித்து சிறப்பு தணிக்கை மேற்​கொண்​டனர். சொத்து வரி, திடக்​கழிவு மேலாண்மை, எல்​இடி விளக்​கு​கள் கொள்​முதல், பராமரிப்​புப் பணி, பரு​வகாலப் பணிகள் உள்​ளிட்ட 7 பிரிவு​களில் ஆய்வு மேற்​கொண்டு 419 பக்​கத்​துக்கு அறிக்கை தயாரிக்​கப்​பட்​டது.

அதில் குடி​யிருப்​பு​களுக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்ள சொத்து வரியைப் போல், தொழிற்​சாலை, நிறு​வனங்​கள், கல்​விக் கூடங்​களுக்​கும் குறைவான வரி விதிக்​கப்​பட்டு இருந்​தது தெரிய வந்​துள்​ளது. குறைவான அளவு வரி விதிக்க அதி​காரி​கள் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களிடம் லஞ்​சம் பெற்​றுள்​ளனர். இதன் மூலமாக சொத்​து​வரி​யில் மட்​டும் ரூ.2,053 கோடி வரை மாநக​ராட்​சிக்கு வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டிருப்​பது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில், தொழிற்​சாலை, கல்வி நிறு​வனங்​கள், குடி​யிருப்​பு​களுக்​கான சொத்து வரி விதித்​ததில் ரூ.87.17 கோடி, வீடுகளுக்கு வழங்​கும் குடிநீர் இணைப்பை வணிகப் பயன்​பாட்​டுக்கு வழங்​கியதில் ரூ.158.31 கோடி, முறைகேடாக சொத்து வரி தள்​ளு​படி செய்​ததில் ரூ.34.60 கோடி, அனுமதி​யில்​லாத கட்​டிடங்​களுக்கு, சட்ட நட​வடிக்கை இல்​லாமல் சொத்து வரி விதித்​ததில் ரூ.274 கோடி, நீண்ட காலமாக நிலுவை​யில் உள்ள சொத்து வரியை வசூல் செய்​யாததால் ரூ.82.25 கோடி, சூயஸ் நிறு​வனத்​திடம் வட்டி வசூலிக்​காததால் ரூ. 47.92 கோடி, சூயஸ் நிறு​வனம் தோண்​டிய குழியை மாநக​ராட்சி பொது நிதி​யில் ஒப்​பந்​தம் விட்டு சீரமைத்​ததில் ரூ.1 கோடி மற்​றும் அந்த குழிகளில் வெட்​மிக்ஸ் நிரப்​பியதற்கு ரூ.87 லட்​சம் என, மொத்​த​மாக மாநக​ராட்​சிக்கு ரூ. 2,300 கோடி வரை வரு​வாய் இழப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

ஒப்​பந்​தப் பணிகள், வரி விதிப்பு சலுகை உள்​பட மாநக​ராட்​சி​யில் பல்​வேறு பணிகளுக்கு லஞ்​சம் பெற்ற அதி​காரி​கள் மீது லஞ்ச ஒழிப்​புத்​துறை​யினர் தீவிர நட​வடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். நிதி இழப்பு ஏற்​படுத்​திய முறைகேடுகள் தொடர்​பாக, மாநக​ராட்​சி​யில் உள்ள ஆவணங்​கள் மாய​மாகும் முன்பு, லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் ஆவணங்​களை கைப்​பற்றி விசா​ரிக்க தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.

பெரியார் அறி​வுல​கம் நூல் மோசடி போன்று, கோவை மாநக​ராட்​சி​யிலும் மிகப்​பெரிய மோசடி அரங்​கேறியுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்ட அனைத்​துத் துறை அதி​காரி​கள் மீதும் விசா​ரணைக்கு உட்​படுத்தி நட​வடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT