முதல்வர் விஜய்

 
தமிழகம்

முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்ல திட்டம்: சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் நாளை (நவ.16) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை அனுபவங்கள், ‘பிலாங்கிங்:ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல், ஏற்கெனவே நவ. 10-ம் தேதி இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துவிட்டது.

இதன் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஹோட்டலில் நாளை (நவ.16) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய்யும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக அவர் டெல்லிக்கு நாளை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ள இருப்ப தாகக் கூறப்படுகிறது. இதுதவிர அதேநாளில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியையும் சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ள தாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கான முயற்சிகளை தடுக்கவும், இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT