தமிழகம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: விருதுநகரில் முதல்வர் விஜய் செப்.17-ல் தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கான காலை உணவுத் திட்​டத்​தின் விரி​வாக்​கத்தை முதல்​வர் விஜய் செப்​டம்​பர் 17-ம் தேதி தொடங்கி வைக்​க​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​ உள்​ளன.

தமி​ழ​கத்​தில் அரசுப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாண​வர்​களுக்கு ‘காலை உணவுத் திட்​டத்​தை’ அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2021 செப்​டம்​பர் 15-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

அதன்​பின் இத்​திட்​டம் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்​கும் விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் தமி​ழ​கத்​தில் தவெக ஆட்சி மாற்​றத்​துக்​குபின் இத்​திட்​டத்​தின் பெயர் ‘பெருந்​தலை​வர் காம​ராசர் காலை உணவுத் திட்​டம்’ என்று மாற்​றப்​பட்​டதுடன், எட்​டாம் வகுப்பு வரை விரி​வு​படுத்​தப்​படும் என்று தமிழக அரசு அறி​வித்​தது. இதற்​காக ரூ.268 கோடி நிதி​யும் நடப்பு பட்​ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் பெரி​யா​ரின் பிறந்த நாளான செப்​டம்​பர் 17-ம் தேதி காலை உணவுத் திட்​ட விரி​வாக்​கத்​தை, முதல்​வர் விஜய் தொடங்கி வைக்​க​வுள்​ளார்.

விருதுநகரில் உள்ள முன்​னாள் முதல்​வர் காம​ராசர் படித்த கே.​வி.எஸ் நடுநிலைப் பள்​ளி​யில் இத்​திட்ட விரி​வாக்​கத்தை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்​க​வுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்பு முதல்​முறை​யாக தென் மாவட்​டத்​துக்​கு விஜய்​ செல்​வது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT