தமிழகம்

‘கூட்டுறவு சங்க தேர்தல் தேதி குறித்து விரைவில் முதல்வர் முடிவெடுப்பார்’ - அமைச்சர் காந்திராஜ் தகவல்

செய்திப்பிரிவு

வேலூர்: கூட்​டுறவு சங்க தேர்​தல் தேதியை விரைவில் முதல்​வர் அறி​விப்​பார். அதற்​கான பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன என்று கூட்​டுறவு துறை அமைச்​சர் காந்​திராஜ் தெரி​வித்​தார். வேலூர் மாவட்​டத்​தில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற அமைச்​சர் காந்​திராஜ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கூட்​டுறவுத் துறை​யில் உள்ள இடர்​பாடுகளை களைய துறை ரீதி​யான ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறோம். கூட்​டுறவு அங்​காடிகளில் மக்​களுக்கு குறைந்த விலை​யில் சன்​னரக அரிசி விற்​பனை செய்​யப்​படு​கிறது. ரேஷன் அரி​சியை பாலீஷ் செய்து சன்​னரக அரி​சி​யாக கொடுக்​க​வில்லை. அதுபோன்று வரும் தகவல்​கள் தவறானது. தமிழகத்​தில் கூட்​டுறவு சங்​கத் தேர்​தல் தேதியை விரைவில் முதல்​வர் அறி​விப்​பார்.

அதற்​கான பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. கூட்​டுறவு சங்​கத் தேர்​தலுக்கு புதிய கட்​டுப்​பாடுகள் எது​வும் இல்லை. இருக்​கின்ற சட்ட திட்​டங்​களின்​படியே தேர்​தல் நடை​பெறும். கூட்​டுறவு சங்க உறுப்​பினர்​கள் பட்​டியலுடன் ஆதார் எண் இணைக்​கும் பணி நடை​பெற்று வரு​கிறது. கூட்​டுறவுத் துறை​யில் உள்ள காலி பணி​யிடங்​கள் விரைவில் நிரப்​பப்​படும். இவ்​வாறு அமைச்​சர் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT