தமிழகம்

டிஎஸ்பி பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்

செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்​டலூர் அருகே காவல் உயர் பயிற்​சி​யகத்​தில் பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்​பி-க்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்​ற முதல்​வர் விஜய் பதக்கங்கள் வழங்கினார்.

காவல் துணைக் கண்​காணிப்​பாளர் பணி​யிடத்​துக்​கு (டிஎஸ்​பி) தேர்வு செய்​யப்​பட்ட 11 பெண்​கள், 14 ஆண்​கள் என 25 பேர் 52 வார கால அடிப்​படைப் பயிற்​சியை நிறைவு செய்​தனர். இதில் இணைய​வழிக் குற்​றங்​கள், சிசிடிஎன்​எஸ் செய​லாக்​கம், டிஜிட்​டல் தடய​வியல் மற்​றும் நவீன தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​து​வது, வனப் பயிற்​சி, மலை​யேற்​றம், நீச்​சல், தற்​காப்​புக் கலை, யோகா, துப்​பாக்​கி​களைக் கையாளுதல் உள்​ளிட்ட பயிற்​சிகளும் வழங்​கப்​பட்​டன.

பயிற்​சி​யில் ஒட்​டுமொத்த அளவில் சிறந்து விளங்​கிய டி.ஆனீஷ் பிரதீப்​புக்கு வீர​வாள், முதல்​வரின் கோப்பை மற்​றும் தங்​கப் பதக்​கத்தை விஜய் வழங்​கி​னார். ஓ.கார்த்​தி​கா​வுக்கு வெள்​ளிப் பதக்​க​மும், பி.எஸ். திவ்​யா​வுக்கு வெண்​கல​மும் வழங்​கப்​பட்​டன. முன்​ன​தாக, டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் முன்​னிலை​யில், பயிற்சி முடித்த அதி​காரி​கள் உறு​தி ஏற்​றனர்.

விழா​வில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், அமைச்​சர்​கள் சரத்​கு​மார், மரிய​வில்​சன், ரா.கு​மார், அரசு தலை​மைக் கொறடா ரா.சபரி​நாதன், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், உள்​துறை செயலர் மணி​வாசன், பயிற்​சியக டிஜிபி (பொ) ராஜீவ் குமார், எம்​எல்​ஏக்​கள் உள்​ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT