தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டம்?

டெக்ஸ்டர்

சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேரவை​யின் புதிய உறுப்​பினர்​கள் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்றனர். 

இந்த பதவியேற்பு முடிந்தபிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னதாக நேற்று முதல்வராக பதவியேற்ற கையோடு பெரியார் திடலுக்குச் சென்ற ஜோசப் விஜய் அங்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தவெக தலைவர் ஜோசப் விஜய் தனது தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவையும், ஸ்டாலினையும் எதிர்த்தே பேசி வந்த நிலையில், இந்த சந்தித்து ஆரோக்கியமான அரசியலுக்கான முன்னெடுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT