தமிழகம்

26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பெண்​கள், குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​களைத் தடுக்​கவும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு விரைவாக நீதி கிடைக்​கவும் 26 போக்சோ சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைக்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

பெண்​கள், குழந்​தைகளுக்கு எதிரான குற்​றங்​களைத் தடுப்​ப​தற்​கும், இத்​தகைய குற்​றங்​களில் ஈடு​படுவோர் மீது விரைந்து சட்ட நட​வடிக்கை மேற்​கொள்​வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உரிய காலத்​தில் நீதி கிடைப்​பதை உறுதி செய்​வதற்​கும் தமிழக அரசு பல்​வேறு முன்​னெடுப்​பு​களை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது.

அதன் அடிப்​படை​யில், தமிழகம் முழு​வதும் நிலுவை​யில் உள்ள போக்சோ வழக்​கு​களின் நிலை குறித்து நடை​பெற்ற ஆய்வு கூட்​டத்​தில், போக்சோ வழக்​கு​களின் விவரம், தற்​போதைய நிலை மற்​றும் போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவாகும் வழக்​கு​களை மட்​டும் விசா​ரிப்​ப​தற்​கென கூடுதலாக தேவைப்​படும் நீதி​மன்​றங்​கள் ஆகியவை குறித்து தமிழக முதல்​வர் விஜய் விரிவாக கேட்​டறிந்​தார்.

ஆய்​வின் அடிப்​படை​யில், இவ்​வழக்​கு​களின் விசா​ரணையை விரைவுபடுத்தி, குற்​றம் நிரூபிக்​கப்​படும் நபர்​களுக்கு சட்​டப்​படி உரிய தண்​டனை பெற்​றுத் தரு​வதற்​கான நட​வடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட வேண்​டும் என்​றும், அனைத்து மாவட்​டங்​களி​லும் போக்சோ நீதி​மன்​றங்​களை அமைப்​ப​தற்​குத் தேவை​யான உடனடி நட​வடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறும் முதல்​வர் உத்​தர​விட்​டார்.

ஏற்​கெனவே பாலியல் குற்​றங்​களில் இருந்து குழந்​தைகளை பாது​காக்​கும் சட்​டம், 2012-ன் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை மட்​டும் விசா​ரிப்​ப​தற்​காக, மாநிலத்​தில் 22 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பட்டு வரு​கிறது.

அதனையும், மற்​றும் 4 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பாட்​டுக்கு வரும் நிலை ஆகிய​வற்​றையும், நிலுவை​யில் உள்ள வழக்​கு​களின் எண்​ணிக்​கையையும் கருத்​தில் கொண்டு, முதல்​வரின் அறி​வுறுத்​தலின்​படி 12 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​களும், 14 கூடுதல் சிறப்பு நீதி​மன்​றங்​கள் என மொத்​தம் 26 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​கள் ரூ. 46.59 கோடி செல​வில் அமைக்க அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம், தமிழகத்​திலுள்ள 47 காவல் மாவட்​டங்​களுக்கு மொத்​தம் 52 சிறப்பு நீதி​மன்​றங்​கள் அமைய உள்ளன. இதன் மூலம் பாலியல் குற்​றங்​களில் இருந்து குழந்​தைகளை பாது​காக்​கும் சட்​டம், 2012-ன் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை மட்​டும் விரைவாக விசா​ரித்து பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நீதி​யும், இம்​மாதி​ரியான கொடுமையான குற்​றங்​கள் மீண்​டும் நடை​பெறு​வதை தடுக்க ஏது​வாக மிக அதி​கபட்ச தண்​டனையும் குற்​றவாளி​களுக்கு பெற்று தரு​வது உறுதி செய்​யப்​படும்.

போதைப்​பொருள்: அதேபோல், தமிழக அரசின் “போதைப்​பொருள் இல்​லாத தமிழ்​நாடு” இயக்​கத்​தின் ஒரு பகுதி​யாக, போதைப்​பொருள் கடத்​தல், பயன்​பாட்டை கட்​டுப்​படுத்​து​வதுடன், போதைப்​பொருள்​கள் மற்​றும் மனமயக்​கப் பொருள்​கள் சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​படும் வழக்​கு​களை உரிய சட்ட நடைமுறைகளை பின்​பற்றி விரைந்து விசா​ரித்து முடிக்க அரசு பல்​வேறு நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

தற்​போது, தமிழகத்​தில் 11 சிறப்பு நீதி​மன்​றங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், இச்​சட்​டத்​தின் கீழ் நிலுவை​யில் உள்ள அனைத்து வழக்​கு​களை​யும் விரைந்து விசா​ரித்து முடிக்க வேண்​டியதன் அவ​சி​யத்தை கருத்​தில் கொண்​டும், முதல்​வரின் உத்​தர​வின்​படியும், காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர் மற்​றும் வேலூர் ஆகிய 3 இடங்​களில் தலா ஒரு சிறப்பு நீதி​மன்​றமும், சென்​னை​யில் ஒரு கூடுதல் சிறப்பு நீதி​மன்​றமும் என மொத்​தம் 4 புதிய சிறப்பு நீதி​மன்​றங்​களை அமைக்க தமிழக அரசு, அரசானை வெளி​யிட்​டுள்​ளது.

இதன் மூலம், நிலுவை​யில் உள்ள வழக்​கு​களை விரைந்து விசா​ரித்து முடிப்​ப​தற்​கும், நீதித்​துறை நடைமுறைகளை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கும், போதைப்​பொருள் இல்​லாத தமிழகத்தை உரு​வாக்​கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்​படுவதற்​கும் வழிவகை செய்​யப்​பட்​டுள்​ளது என்று தமிழக அரசின் செய்​திக்​குறிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT