மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில், தமிழக முதல்வர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார்.

 
தமிழகம்

கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோ திட்டங்களுக்கு நிதி: மத்திய நிதியமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கோவை, மதுரை மற்​றும் ஓசூரில் மெட்ரோ ரயில் திட்​டங்​களுக்கு தேவை​யான நிதியை ஒதுக்க மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனிடம் முதல்​வர் விஜய் கோரிக்கை வைத்​துள்​ளார்.

தமிழக முதல்​வர் விஜய் 2 நாள் பயண​மாக டெல்லி சென்​றுள்​ளார். நேற்று அவர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை அவரது அலு​வல​கத்​தில் சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின் போது தமிழகத்​தின் நலன்​சார்ந்து நிலுவை நிதி ஒதுக்​கீடு உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​தார்.

அதன்​படி தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு தேவை​யான துறை​முகங்​கள், நெடுஞ்​சாலைகள், ரயில்வே திட்​டங்​கள், தொழில் வழித்​தடங்​கள் ஆகிய​வற்​றுக்கு முன்​னுரிமை அளித்து நிதி ஒதுக்​கீடு செய்ய வேண்​டுமென முதல்​வர் விஜய் வலி​யுறுத்​தி​னார்.

அதே​போல், தமிழகத்​தின் வலு​வான கல்​விச்​சூழலை வலுப்​படுத்த தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கல்வி நிறு​வனங்​களை நிறு​வவேண்​டும். மாநிலத்​தின் பொருளா​தா​ரத்​தி​லும், தொழில் வளர்ச்​சி​யிலும் முக்​கிய பங்​காற்றி வரும் ஓசூர், கோயம்​புத்​தூர் மற்​றும் மதுரை நகரங்​களின் பொதுப் போக்​கு​வரத்தை மேம்​படுத்​திட தேவை​யான மெட்ரோ ரயில் திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வதற்கு உரிய நிதி ஒதுக்​கீடு செய்​யு​மாறும் மத்​திய அமைச்​சரை முதல்​வர் விஜய் கேட்​டுக்​கொண்​ட​தாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT